அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில்
Remove ads

அச்சரப்பாக்கம் ஆட்சீசுவரர் கோயில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[2]

விரைவான உண்மைகள் சந்நிதி 1, பெயர் ...
விரைவான உண்மைகள் சந்நிதி 2, பெயர் ...
Remove ads

இறைவன்

மூலவர் ஆட்சீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன.

வழிபட்டோர்

இரண்டு சந்நிதிகள் இத்திருத்தலத்தில் உள்ளன.கண்ணுவ முனிவர், கௌதம முனிவர் வழிபட்ட திருத்தலம்.[1]

தல புராணம்

திரிபுரம் எரிக்க சிவபெருமான் செல்லும் பொழுது தேர் அச்சு முறிந்தது. இதற்கு கணபதியிடம் விடை பெறாததே காரணம் என்று கணபதிக்கு ஆசி வழங்கிய தலம் இதுவாகும். அச்சு + இறு + பாக்கம் - அச்சிறுபாக்கம் என்பது மருவி அச்சரப்பாக்கம் என தற்போழுது வழங்கப்பெறுகிறது.

அகழ்வாராய்ச்சிகள்

இங்கு இடம்பெற்ற பல்வேறு தரப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் தொண்டை மண்டலப் பிரதேசத்தில் 6 ஆம் 7 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இப்பாத்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. இத்தொண்டை மண்டலப் பிரதேசம் சங்க காலத்தில் பல்லவர்களின் அரசியல் செல்வாக்கு தழைத்தோங்கிய பிரதேசமாகக் காணப்படுகின்றது.[3]

போக்குவரத்து

திருச்சி-சென்னை அதிவேக பாதையில் 79 ஆவது கிலோமீட்டர் தொலைவில் அச்சிறுபாக்கம் அமைந்துள்ளது.
திருச்சி-சென்னை உடனான பகையிரதப் பாதையில் அச்சிறுபாக்கமே தலைமையகமாகும்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads