அஞ்சனிபாய் மல்பேகர்
இந்தியப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஞ்சனிபாய் மல்பேகர் (Anjanibai Malpekar, ஏப்ரல் 22, 1883 - ஆகத்து 7, 1974) ஒரு புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய பாடகராவார். பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் பீண்டிபஜார் கரானாவைச் சேர்ந்தவராவார்.
1958ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் கௌரவம் வழங்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர். இது இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாடமி அமைப்பான சங்கீத நாடக அகாடமியால், வழஙப்பட்டது. [1]
இளமையில் இவரது அழகுக்காக பாராட்டப்பட்ட மல்பேகர் ஓவியர்களான ராஜா ரவி வர்மா மற்றும் எம்.வி. துரந்தர் ஆகியோரின் அருங்காட்சியகமாக இருந்தார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி
மல்பேகர் 1883 ஏப்ரல் 22 அன்று, கோவாவின் மால்பே என்ற இடத்தில் கோயன் கலாவந்த் சமூகத்தைச் சேர்ந்த ஒரு அன்பான இசை குடும்பத்தில் பிறந்தார். இவரது பாட்டி குஜாபாய் மற்றும் தாய் நபுபாய் இருவரும் இசை வட்டாரங்களில் மரியாதைக்குரியவர்கள் ஆவர். மல்பேகர் தனது 8 வயதில், பெண்டிபஜார் கரானாவில் உஸ்தாத் நசீர் கானின் உதவியுடன் தனது இசை பயிற்சியைத் தொடங்கினார். [2] இந்த கரானாவின் தோற்றம் மிகவும் பழமையான மொராதாபாத் கரானாவில் இருந்தது. இது மும்பையின் பீண்டி பஜார் பகுதியில் அமைந்துள்ளது.
Remove ads
தொழில்

மல்பேகர் தனது 16ஆவது வயதில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது முதல் நிகழ்ச்சியை வழங்கினார். அந்த நாட்களில், "மரியாதைக்குரிய குடும்பங்களின்" பெண்கள் ஒருபோதும் பொதுவெளியில் பாடியதில்லை. அதே நேரத்தில் மல்பேகர் பொதுவெளியில் அரச ஆதரவுடன் ஒரு செழிப்பான பாடலைத் தொடர்ந்தார். காலப்போக்கில், இவர் கரானாவின் நிபுணரானார். [2] [3]

இவரது பாடல்களுக்காகத் தவிர, இவரது அழகுக்காகவும் பாராட்டுகளைப் பெற்றார். ஓவியர் எம்.வி. துரந்தர் இவரைக் கொண்டு ஒரு எண்ணெய் ஓவியம் வரைந்தபோது, மற்றொரு ஓவியரான ராஜா ரவி வர்மா ஈர்க்கப்பட்டு, மல்பேகருடன் ஒரு கலை வித்தகராக தொடர்ச்சியான ஓவியங்களை வரைய ஆர்ம்பித்தார். இதில் "லேடி இன் தி மூன்லைட்", "லேடி பிளேயிங் ஸ்வார்பத்", "மோகினி" மற்றும் "தி ஹார்ட் ப்ரோக்கன்", போன்ற் புகழ்பெற்ற ஓவியங்கள் அவர் 1901 மற்றும் 1903 ஆம் ஆண்டுகளில் மும்பையில் தங்கியிருந்தபோது மல்பேகரைக் கொண்டு வரைந்தார். இருப்பினும் இதில் குறைபாடு இல்லாமல் இல்லை, குறிப்பாக பொதுவெளியில் இசை நிகழ்ச்சிகளில் முதன்மையாக ஆண் பார்வையாளர்களுடன் பாடுவது பெரும்பாலும் இவருக்கு துன்புறுத்தலுக்கு வழிவகுத்தது. 1904ஆம் ஆண்டில், இவர் பொதுவெளியில் பாடுவதில் பயத்தை வளர்த்துக் கொண்டார். ஒரு வருடத்திற்குப் பிறகு அதை மீட்டெடுத்தாலும், தனது குரலை இழந்தார். [2]
இதற்கிடையில், இவர் சேத் வசன்ஜி வேட் என்பவரை மணந்தார். பாடகியாக ஒரு வெற்றிகரமான வாழ்க்கைக்குப் பிறகு, 1920இல் தனது குரு உஸ்தாத் நசீர் கான் இறந்த பிறகு, இவர் இசை நிகழ்ச்சிகளில் தனது ஆர்வத்தை குறைத்துக் கொண்டார். இறுதியாக, மும்பையின் டவுன் ஹாலில் நடைபெற்ற ஒரு கடைசி நிகழ்ச்சிக்குப் பிறகு, இவர் 1923இல் பொதுவில் பாடுவதை கைவிட்டார். [2] தனது 40 வயதில், இசைக் கற்பிப்பதற்காக மீதமுள்ள வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். அவர் தனது முதல் சீடராக இருந்த குமார் காந்தர்வா, கிஷோரி அமோன்கர் , [4], பண்டிட் டி.டி. ஜனோரிகர் (1921-2006) [5] , பேகம் அக்தர் மற்றும் நைனா தேவி போன்ற பலருக்கு கற்பித்தார். 1960களில், மும்பையை தளமாகக் கொண்ட பீண்டிபஜார் கரானா இந்தியா முழுவதும் பிரபலமானது, அமன் அலிகானைத் தவிர பிரபலமான இசைக்கலைஞர்களின் எண்ணிக்கையில், அதில் ஜான்டே கான், மம்மன் கான், ஷபீர் மற்றும் அமீர் கான் ஆகியோர் இருந்தனர்.
1958ஆம் ஆண்டில், இவரது இசை பங்களிப்பிற்காக, இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான இந்தியாவின் தேசிய அகாடமியான சங்கீத நாடக அகாடமி இவருக்கு சங்கீத நாடக அகாடமி கூட்டாளர் என்ற மிக உயர்ந்த விருடினை வழங்கியது. மேல்ய்ம், இந்த கௌரவத்தை பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். [1]
இவர் 1974 ஆகஸ்ட் 1974 அன்று மும்பையில், தனது 91ஆவது வயதில் இறந்தார். [6][7]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads