அடவு (பரதநாட்டியம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பரதநாட்டியத்தில் அடவு என்பது ஆடலின் ஆதாரப்பகுதியைக் குறிக்கும். நாட்டியம் பயிலத் தொடங்கும் ஒருவருக்கு பயிற்சி போன்று இவ் அடவு விளங்குகின்றது. தமிழில் ஆடல் என்ற அடிப்படைச் சொல்லைக் கொண்டது அடவு. அடவு என்பதனை தெலுங்கில் அடுகு என்று அழைப்பர். அடுகு என்றால் பாதத்தின் ஓர் அடி என்பது இதன் பொருளாகும்.அடவு என்னும் சொல் முன்னர் சமஸ்கிருதத்தில் கரணம் எனக் கூறப்பட்டது. இவ் இரண்டு சொற்களின் பொருள் ஒன்று தான். ஆனால் இன்று பாவனையில் உள்ள அடவுகள் வேறு கரணம் என்ற சொல்லில் வழங்கும் 108 கரணங்கள் வேறு. அடவு என்னும் சொல் தமிழ்நாட்டில் மட்டும் அன்றி ஆந்திரா, கர்நாடகம், கேரளம் போன்ற தேசங்களிலும் இன்று வரை உபயோகிக்கப்படுகின்றது. ஒரு மொழியில் வாக்கியங்கள் எவ்வாறு முக்கியமானதாக விளங்குகின்றதோ அது போல நடனத்திற்கு அடவுகள் விளங்குகின்றன. அடவு என்பது நிலை (ஸ்தானம்), பாதபேதங்கள் (சாரி), முத்திரைகள் (ஹஸ்தங்கள்) என்ற மூன்று அம்சங்களையும் உள்ளடக்கியதாகும். பரதநாட்டியத்தில் பல பாணிகள் உள்ளமையால் ஒவ்வொரு பாணிகளிலும் வித்தியாசமான அடவுகள் உள்ளன. பல அடவுகள் ஒரே மாதியாக இருந்தாலும் அவை வேறு வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.அத்துடன் எண்ணிக்கையிலும் மாறுபாடுடையவையாகவும் காணப்படுகின்றன. பரதநாட்டியத்தில் பல அடவுகள் உள்ளன.


Remove ads

அடவுகள்

மேலதிகத் தகவல்கள் அடவு, எண்ணிக்கை ...
Remove ads

உசாத்துணை

  • பரதக்கலை கோட்பாடு, டாக்டர் பத்மா சுப்ரமணியம்- 2005 டிசம்பர் [பதிப்பு 6]
  • பரதநாட்டியம் செய்முறை தாள விளக்கம்- திருமதி சிறீதேவி கண்ணதாசன் B.FA(Dance)dip.in.Ed-2007
  • பைங்கலை பரதக்கலை- சுபாஷிணி பத்மநாதன்-2006
  • ஆசிரியர் கைநூல்[தரம்6-தரம்13] -தேசிய கல்வி நிறுவகம் கொழும்பு- இலங்கை

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads