அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அடிமைப்படுத்தல், மற்றும் திரான்சு-அத்திலாந்திக்கு அடிமை வணிகத்தினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள் (International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade) என்பது ஆண்டுதோறும் மார்ச் 25 அன்று ஐக்கிய நாடுகள் அவையினால் நினைவுகூரப்படும் ஒரு பன்னாட்டு நாளாகும்.
அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கப்பால் இடம்பெற்றுவந்த அடிமை வணிகத்தினால் பாதிக்கப்ப்ட்டோரை அல்லது உயிரிழந்தோரை நினைவுகூரும் முகமாக ஐக்கிய நாடுகள் அவை 2007 ஆம் ஆண்டு முதல் இந்நாளைக் கடைப்பிடித்து வருகிறது. இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். இனவெறி மற்றும் பாரபட்சம் போன்ற ஆபத்துகளிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்தனர். இது "வரலாற்றில் இடம்பெற்ர மிக மோசமான மனித உரிமை மீறல்" எனக் கருதப்படுகிறது.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads