அடிலெய்டு நீள்வட்ட அரங்கம்

From Wikipedia, the free encyclopedia

அடிலெய்டு நீள்வட்ட அரங்கம்map
Remove ads

அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் (Adelaide Oval) தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெயிட் நகரில் அமைந்துள்ள விளையாட்டரங்கமாகும். இது அடிலெய்டு நகர மையத்திற்கும் வடக்கு அடிலெய்டிற்கும் இடையே பார்க்லாண்ட்சில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், இடம் ...

இந்த விளையாட்டரங்கம் முதன்மையாக துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் காற்பந்தாட்டப் போட்டிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இவ்வரங்கம் இரக்பி லீக், இரக்பி யூனியன், சங்கக் கால்பந்து, மற்றும் இசைக் கச்சேரிகளுக்கும் அவ்வப்போது வழங்கப்படுகின்றது. 1933இல் நடந்த ஆசசு தொடரில் மூன்றாவது தேர்வுப் போட்டிக்கு துடுப்பாட்டத்திற்கு சாதனை வருகையாக 50,962 பார்வையாளர்கள் கண்டு களித்தனர்; அனைத்துப் போட்டிகளுக்குமான சாதனை வருகையாக 62,543 பேர் 1965இல் நடந்த தெற்கு ஆத்திரேலியா காற்பந்துக் கூட்டிணைவு ஆட்டத்திற்கு வந்திருந்தனர்; இப்போட்டி அடிலெய்டு துறைமுகத்திற்கும் இசுட்டூவர்ட்டு காற்பந்துக் கழகத்திற்கும் இடையே நடைபெற்றது.

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads