அஷ்டாத்தியாயீ

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அட்டாத்தியாயி (Aṣṭādhyāyī (अष्टाध्यायी)) பழம் சமசுகிருத மொழிக்கான இலக்கண நூலாகும். பாணினி என்பவரால் எழுதப்பட்ட இந்நூல் சுருக்கமாக இருந்தாலும் சமசுக்கிருத இலக்கணத்தின் எல்லா அம்சங்களையும் விளக்குகிறது.[1] இது தாதுபாதம், கணபாதம் ஆகிய சொற்பட்டியல்களில் இருந்து தரவுகளைப் பெற்று அவற்றிலிருந்து சொற்களை உருவாக்குவது பற்றிய விளக்கங்களைத் தருகிறது. இது பெருமளவு முறைப்படுத்தப்பட்டதும், தொழில்நுட்பத் தன்மை கொண்டதும் ஆகும். இதன் அணுகுமுறையில் ஒலியன், உருபன், வேர்ச்சொல் ஆகிய கருத்துருக்கள் இயல்பாக அமைந்துள்ளன. இக் கருத்துருக்கள் மிக 2000 ஆண்டுகளுக்குப் பின்னரே மேல் நாட்டு மொழியியலாளர்களுக்கு அறிமுகமாயின. அட்டாத்தியாயியின் விதிமுறைகள் சமசுக்கிருதத்தின் உருபனியலை முழுமையாக விளக்குவதாகச் சொல்லப்படுகிறது. உள்ளுணர்வுசாராத இவ்விதிகளின் அமைப்புக் காரணமாக இது தற்காலத்து இயந்திர மொழிகளை ஒத்ததாகக் காணப்படுகிறது. அட்டாத்தியாயியில் 3,959 சூத்திரங்கள் உள்ளன.[2]இது எட்டு அத்தியாயங்களாகவும், அந்த அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் நான்கு பாதங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

Remove ads

காலம்

இதன் காலம் பற்றிச் சரியான சான்றுகள் இல்லை. எனினும் பெரும்பாலான அறிஞர்கள் இது கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்புகின்றனர். இன்னும் முன்பாக இது கிமு ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டிருக்கலாம் என்பதும் சிலரது கருத்து. பழம் சமசுக்கிருதத்தை விளக்குவதால், இது வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் சேர்ந்ததாகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads