அட்டோக் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அட்டோக் மாவட்டம் (Attock District) (Urdu: ضِلع اٹک) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கில் ராவல்பிண்டி கோட்டத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் அட்டோக் நகரம் ஆகும். இம்மாவட்டம் போத்தோகர் பீடபூமியில் அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

6857 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக அட்டோக், பதே ஜங், ஜாந்த், ஹசன் அப்தல், ஹஸ்ரோ மற்றும் பிண்டி ஹேப் என ஆறு தாலுக்காக்களாகப் பிரித்துள்ளனர்.[1] இம்மாவட்டம் 72 கிராம ஒன்றியக் குழுக்கள் கொண்டது.[2]

மக்கள் தொகை

6857 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 1,274,935 ஆகும். மக்கள் தொகையில் 20.45% நகர்புறங்களில் வாழ்கின்றனர். பஞ்சாபி மொழியை 87.15% மக்களும், உருது மொழியை 1.06% மக்களும், மற்றும் பஷ்தூ மொழியை 8.28% மக்களும் பேசுகின்றனர். இம்மாவட்டத்தின் ஹசன் அப்தல் தாலூக்காவில், ராவல்பிண்டி நகத்திலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் சீக்கிய பஞ்சா சாகிப் குருத்துவார் உள்ளது. குருநானக் இவ்விடத்தில் வருகை தந்துள்ளார். பன்னாட்டு சீக்கியர்கள் ஆண்டில் இரு முறை இங்குள்ள குருத்துவாருக்கு சென்று வழிபடுகின்றனர்.

Remove ads

பொருளாதாரம்

இம்மாவட்டத்தில் வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. இங்கு வற்றாத சிந்து ஆறு 130 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்வதால், இம்மாவட்டம் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. கோதுமை, பார்லி, பயறு வகைகள், சோளம், சிறு தானியங்கள் விளைகிறது. மேலும் கம்பளித் துணிகள், ஆடைகள் உற்பத்தி ஆலைகள், இயற்கை எரிவாயு சுரங்கங்கள் உள்ளது.

கல்வி

இம்மாவட்டத்தில் 1,287 அரசுப் பள்ளிகளில் 657 பள்ளிகள் மகளிருக்கானது.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads