அணுக்கருத் தாக்கம்

From Wikipedia, the free encyclopedia

அணுக்கருத் தாக்கம்
Remove ads

அணுக்கரு இயற்பியல் மற்றும் அணுக்கரு வேதியியலில் அணுக்கருத்தாக்கம் (Nuclear reaction) என்பது இரு அணுக்கருக்களோ அல்லது அணுவுக்கு வெளியிலிருந்தான உப துகளும் (நியூத்திரன், புரோத்திரன், இலத்திரன் போன்றவை) ஓர் அணுக்கருவும் மோதி ஆரம்ப துகளிலிருந்து மாறுபட்ட விளைவைத்தரும் செயன்முறையாகும். கொள்கையளவில் ஒரு தாக்கத்தில் மூன்றிற்கு மேற்பட்ட துகள்கள் மோதுகையில் பங்கு கொள்ள இயலும் ஆனால் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட துகள்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சந்திப்பதற்கான நிகழ்தகவு இரு கருக்கள் சந்திப்பதனை விட மிகக்குறைவு, எனவே இது போன்ற ஒரு நிகழ்வு விதிவிலக்கிலும் அரிதான ஒன்றாகும். தன்னிச்சையான வேதியியல் தாக்கத்தினை போல கதிரியக்க காலல் என்பதும் தன்னிச்சையான அணுக்கருத்தாக்கமாக கருதப்படுகிறது, எனினும் அணுக்கருத்தாக்கம் என்பது பொதுவாக தூண்டப்பெற்ற வகை அணுக்கருத்தாக்கத்தையே குறிக்கிறது, இங்கு இரு துகள்கள் தொடக்கத்தில் தாக்கமுறுகின்றன ஆனால் இது கதிரியக்க காலலிற்கு பொருந்தாது.

Thumb
இந்த அடையாளப்படத்தில், 6
3
Li
உம் தியூட்டிரியமும் (2
1
H
) தாக்கமுற்று மிகத்தூண்டப்பெற்ற இடைநிலைக் கருக்களை உருவாக்குகின்றன, பின்னர் 8
4
Be
உடனடியாக இரு அல்பா துகள்களாக சிதைவடைகின்றது. புரோத்தன்கள் சிவப்பு நிறக் கோளங்களினாலும், நியூத்திரன்கள் நீல நிறக் கோளங்களாலும் அடையாளப்படுத்தப்படுகிறது.

துகள்கள் மோதி மாற்றமடையாமல் திரும்புமாயின் அச்செயன்முறை தாக்கம் எனப்படாது மீளுகின்ற மோதல் என்று அழைக்கப்படுகிறது.

6
3
Li
 
+ 2
1
H
 
 4
2
He
 
+ ?

மேலுள்ள சமன்பாட்டை சமப்படுத்த வலது பக்கம் உள்ள இரண்டாவது கருவும் அணுவெண் 2 உம் திணிவெண் 4 உம் கொண்டிருத்தல் வேண்டும் எனவே அதுவும் ஈலியம்-4 ஆகவே அமைதல் வேண்டும், எனவே முழுச்சமன்பாடு:

6
3
Li
 
+ 2
1
H
 
 4
2
He
 
+ 4
2
He

அல்லது இன்னும் எளிமையாக:

6
3
Li
 
+ 2
1
H
 
 2 4
2
He

இயற்கை அணுக்கருத்தாக்கமானது அண்டக்கதிர்களிற்கும் சடப்பெருட்களிற்கும் இடையிலான இடைத்தாக்கத்திலும் குறிப்பிட்ட சில கதிரியக்ககாலலிலும்(எடுத்துக்காட்டாக கதிரியக்க சமதானி வெப்பமின் பிறப்பாக்கியில் நிகழும் புளூட்டேனியத்தின் அல்பா காலல்) நிகழ்கிறது அணுக்கரு ஆற்றலைப்பெற கருத்தாக்கங்களை செயற்கையாக மாற்றக்கூடிய விகிதத்தில் தேவைக்கேற்ப நிகழ்த்தலாம். மிகவும் குறிப்பிடத்தக்க கருத்தாக்கங்களாக பிளவடையக்கூடிய பொருட்களின் தூண்டப்பட்ட சங்கிலிக் கருத்தாக்கங்களை குறிப்பிடலாம், மற்றும் பல்வேறு பாரங்குறைந்த மூலகங்களின் கருஇணைவுத்தாக்கங்களின் மூலம் சூரியனிலும் மற்றய விண்மீன்களிலும் ஆற்றல் உற்பத்தியாக்கப்படுகிறது. இவ்விரு வகைத்தாக்கங்களும் அணு ஆயுதங்களில் பாவிக்கப்படுகின்றன.

Remove ads

குறிப்பீடு

இதற்கு முந்தய பத்தியில் பயன்படுத்தப்பட்ட முழுச்சமன்பாட்டிற்கு பதிலாக கருத்தாக்கங்களை விளக்க அடக்கமான சிறு குறிப்பீடு பயன்படுத்தப்படுகிறது. இது A(b,c)D ஆகும் இது A + b தருவது c + D இற்கு பதிலாக பயன்படுகிறது. பொதுவான இலோசான துகள்கள் இம்முறையால் சுருக்கப்படுகின்றன, எடுத்துக்காட்டாக p என்பது புரோத்தன், n என்பது நியூத்திரன், d என்பது தியூட்டிரியம், α என்பது அல்பா துகள் அல்லது ஈலியம்-4, β என்பது பீட்டா துகள் அல்லது இலத்திரன், γ என்பது காம்மா கதிர், பிற. இத்தாக்கம் இவ்வாறு Li-6(d,α)α எழுதப்படலாம் [1][2]

Remove ads

வரலாறு

1917 ஆம் ஆண்டில் மன்சாஸ்டர் பல்கலைக்கழகத்தில் இரதபோர்ட் அல்பா துகள்களை நைதரசன் மீது செலுத்தி பின்வரும் தாக்கத்தின் முலம் 14N + α → 17O + p.  அவரால் நைதரசனை ஆக்சிசனாக மாற்ற முடிந்தது.; இது தூண்டப்பெற்ற கருத்தாக்கத்திற்கான முதல் அவதானிப்பு ஆகும், இத்தாக்கத்தில் ஒரு காலலில் இருந்து வெளிப்பட்ட துகள்கள் மற்றொரு அணுக்கருவினை உருமாற்ற பயன்பட்டது. பின்னர் ஆக்சுபோர்ட்டு பல்கலைக்கழகத்தில் 1932 ஆம் ஆண்டில் ரதபோர்ட்டின் கல்லூரியரான ஜோன் கொக்குறோப்டு மற்றும் ஏர்னஸ்ட் வால்டனால் முற்றிலும் செயற்கையான கருத்தாக்கம் நிகழ்த்தப்பட்டது, இதில் இலிதியம்-7 இன் மீது செயற்கையாக ஆர்முடுக்கப்பட்ட புரோத்தன்கள் மோதவிடப்பட்டு இரு ஆல்பா துகள்களாக உடைக்கப்பட்டது, இச்சாதனை பரவலாக அணுக்களினை பிளத்தல் என்று அழைக்கப்பட்டது, எனினும் இது பிற்காலத்தில் (1938 இல்) பார மூலகங்களில் கண்டறியப்பட்ட அணுக்கருப் பிளவுத்தாக்கம் அல்ல.[3]

Remove ads

மேற்கோள்களும் குறிப்புக்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads