அதம்பார் கோதண்டராமசாமி கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அதம்பார் கோதண்டராமசாமி கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அதம்பார் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.[1] பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.[2][3]

விரைவான உண்மைகள் அருள்மிகு கோதண்டராமசாமி கோவில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இக்கோயில் பொ.ஊ. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் கோதண்டராமர், ஸ்ரீதேவி பூமிதேவி சன்னதிகளும், ஆஞ்சநேயர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[4]

பூசைகள்

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் ஸ்ரீராமநவமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபவிழா திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads