அதாகப்பட்டது மகாசனங்களே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அதாகப்பட்டது மகாசனங்களே (Adhagappattathu Magajanangalay) என்பது 2017 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த நகைச்சுவையும், பரபரப்பும் கலந்த திரைப்படம் ஆகும். இயக்குநர் இன்பசேகர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். அறிமுக நடிகர்களான உமாபதி ராமையா மற்றும் இரேசுமா ரத்தோர் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கருணாகரன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு பணி தொடங்கப்பட்டது.[1][2]
Remove ads
நடிகர்கள்
- ஆனந்தாக, உமாபதி ராமையா
- சுருதியாக, ரேஷ்மா ரத்தோர்
- கருணாகரன்
- ஆனந்தின் தந்தையாக, பாண்டியராசன்
- ஆனந்தின் தாயாக, அஞ்சலி தேவி
- சானகி ராமனாக, யோக் ஜேபி
- மனோபாலா
- ஆடுகளம் நரேன்
- யுவினா பார்த்தவி
- ராசீ
- கரீசு
- பொள்ளாச்சி ராசா
- ரேகா சுரேசு
தயாரிப்பு
2014 ஆம் ஆண்டின் இறுதியில் தம்பி ராமையா தன் மகனான உமாபதி ராமையாவை முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தார். “அதாகப்பட்டது மகாசனங்களே” என்ற இந்த திரைப்படம், தம்பி ராமையாவின் மகனை முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க உதவியது.[3] இயக்குநர் இன்பசேகர் இந்த திரைப்படத்தினை இயக்கியுள்ளார். ரமேசுகுமார் இந்த திரைப்படத்தினை தயாரித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் தோன்றிய ரமேஷ் ரத்தோர் இந்த திரைப்படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்க கையொப்பமிட்டார்.மற்றும் 2015 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.[4] இமான் இந்த திரைப்படத்தில் இசையமைக்க கையொப்பமிட்டார். கருணாகரன், பாண்டியராசன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடிக்க படக்குழுவில் சேர்க்கப்பட்டனர். ஆகத்து 2015 ஆம் ஆண்டில் இந்த திரைப்படத்தின் பணிகள் நிறைவு பெற்று 2017 ஆம் ஆண்டில் வெளியானது.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads