அதிமீயொலிவேகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அதிகூடிய மீயொலிவேகம் காற்றியக்கவியலில் அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுகிறது. 1970-களிலிருந்து மாக் 5-க்கும் அதிகமான வேகங்களைக் குறிப்பிட இப்பதம் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]


அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுவதற்கான மாக் எண் வேறுபடுகிறது, ஏனெனில் காற்றின் பண்பு மாற்றங்கள் வெவ்வேறு வேகங்களில் வெவ்வேறாக இருக்கும்; பொதுவாக மாக் எண் 5 இவ்வகைச் சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. மற்றொருவகையில், திமிசுத்தாரைகள் உந்துவிசையைத் தயாரிக்க இயலாத வேகம் அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுகிறது.
Remove ads
சிறப்பியல்புகள்
அதிமீயொலிவேகத்துக்கான வரையறை குழப்பமாகவும் சில வேளைகளில் விவாதத்துக்குரியதாகவும் உள்ளது, ஏனெனில் மீயொலிவேகத்துக்கும் அதிமீயொலிவேகத்துக்கும் இடையில் ஏதும் தொடர்ச்சியற்ற தன்மை இருப்பதில்லை. மீயொலிவேகப் பகுப்பாய்வுகளில் புறக்கணிக்கப்படக்கூடிய பல பண்புகள் அதிமீயொலிவேகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வாறு முக்கியத்துவம் பெறும் அதிமீயொலிவேகத்தின் தனித்தன்மைகள்:
- அதிர்வுப் படலம்
- காற்றியக்க வெப்பமேற்றம்
- சிதறம் படலம்
- இயல்புவளிம விளைவுகள்
- குறைவான அடர்த்தியின் விளைவுகள்
- காற்றியக்க குணகங்களின் மாக் எண் சார்பற்ற தன்மை.
Remove ads
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads