அந்தாலூசியா

From Wikipedia, the free encyclopedia

அந்தாலூசியாmap
Remove ads

அந்தாலூசியா (Andalusia, எசுப்பானியம்: Andalucía) எசுப்பானியாவின் 17 தன்னாட்சி சமூகங்களில் மக்கள்தொகையில் முதலாமிடம் வகிக்கும் தன்னாட்சி பகுதியாகும்; பரப்பளவில் காஸ்தில் மற்றும் வியோனை அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த தன்னாட்சிப் பகுதி எட்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன: அல்மீரியா, காதிசு, கோர்டோபா, கிரானடா, உயெல்வா, ஹேன், மலாகா, செவில் இதன் தலைநகரம் செவீயா (எசுப்பானியம்: Sevilla).

விரைவான உண்மைகள் அந்தாலூசியா Andalucía (எசுப்பானியம்), நாடு ...

அந்தாலூசியா ஐபீரிய மூவலந்தீவின் தெற்கில் உள்ளது. எக்சுட்ரீமதுரா, காஸ்தில்-லா மஞ்சா தன்னாட்சி பகுதிகளுக்கு தெற்கிலும் முர்சியா தன்னாட்சி பகுதிக்கும் நடுநிலக்கடலுக்கும் மேற்கேயும் போர்த்துகல்லுக்கும் அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கு கிழக்கிலும் நடுநிலக் கடல் மற்றும் ஜிப்ரால்ட்டர் நீரிணைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. சிறிய பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான ஜிப்ரால்ட்டர் அந்தாலூசிய மாநிலம் காடிசுடன் ஜிப்ரால்ட்டர் நீரிணையின் கிழக்கு முனையுடன் நில எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.

Remove ads

வரலாறு

அந்தாலூசியா என்ற தற்காலத்துப் பெயர் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த ஐபீரிய மூவலந்தீவு முழுமையையுமே முஸ்லிம்கள் அழைத்த அரபு மொழி சொல்லான அல்-அந்தாலுசு (الأندلس) என்பதிலிருந்து வந்ததாகும். அந்தக் காலத்தில், வடக்கு ஐபீரிய மூவலந்தீவை கிறித்தவ அரசர்களும் தெற்கு ஐபீரிய மூவலந்தீவை முஸ்லிம்களும் ஆண்டுவந்தனர்.

கி.பி 711 இல் முசுலிம்கள் கிறித்தவர் கட்டுப்பாட்டிலிருந்த ஐபீரிய மூவலந்தீவை தாக்கினர்; 719 இல் முஸ்லிம்கள் வெற்றி பெற்று வடக்கு பிரனீசு மலைத்தொடர் மலைகளில் சிறுபகுதியைத் தவிர மூவலந்தீவு முழுமையுமே கைப்பற்றினர். தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு அல்-அந்தாலுசு (الأندلس) எனப் பெயர் சூட்டினர்.

வடக்கிலிருந்த கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஏழு நூற்றாண்டுகளுக்கு முஸ்லிம்களுடன் போரிட்டு மெல்ல மெல்ல தெற்குப் பகுதிகளை கைப்பற்றி வந்தனர். இந்தப் போர்முறை ரிகான்குவெஸ்டா (Reconquista எசுப்பானியத்திலும் போர்த்துக்கேயத்திலும் "மீள்வெற்றி" எனப் பொருள்படும்) எனப்பட்டது. 1492இல் பெர்தினான்டு அரசரும் இசபெல்லா அரசியும் கிரனாதாவிலிருந்த கடைசிக் கோட்டையையும் கைப்பற்றினர். அதேயாண்டு எசுப்பானியாவிலிருந்து முசுலிம்களும் யூதர்களும் வெளியேற்றப்பட்டனர்.

Remove ads

சின்னங்கள்

அந்தாலூசிய மேலங்கிச் சின்னத்தில் எர்க்குலிசும் இரண்டு சிங்கங்களும் இரண்டு தூண்களுக்கு இடையில் இருப்பதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது; இந்த இருதூண்கள் மரபுப்படி ஜிப்ரால்ட்டர் நீரிணையின் இரு தூண்களாகும். கீழேயுள்ள வாசகத்தில் அந்தாலூசியா பார் சி, பார எசுப்பானியா யி லா யுமானிடாடு ("அந்தாலூசியா தனக்காகவும், எசுப்பானியா மற்றும் மனிதத்தற்காகவும்") என எழுதப்பட்டுள்ளது. இரு தூண்களுக்கு மேலேயுள்ள வளைவில் அந்தாலூசியா கொடியின் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன; இதில் இலத்தீனில் டொமினேட்டர் ஹெர்குலஸ் ஃபண்டேட்டர் என எழுதப்பட்டுள்ளது.[1]

அந்தாலூசியாவின் அலுவல்முறையான கொடியில் மூன்று சமமான கிடை பட்டைகள், பச்சை,வெள்ளை,பச்சை என்ற வரிசையில் உள்ளன; அந்தாலூசிய மேலங்கிச் சின்னம் நடுப்பட்டையின் மையத்தில் உள்ளது. இக்கொடி 1918இல் மலாகா மாநிலத்தில் ரோண்டாவில் நடந்த அந்தாலூசிய தேசியவாதிகள் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.[1]

அந்தாலூசியப் பண்ணின் குரல் பதிவு.
அந்தாலூசியப் பண்ணின் இசைக்கருவிப் பதிவு.

அந்தாலூசிய பண்ணை ஓசே டெல் காஸ்தில்லோ டியாசு இசையமைத்துள்ளார்; இமற்கான பாடல்வரிகளை பிளாசு இன்பாந்தே.எழுதியுள்ளார். இதற்கான இசை அறுவடையின் போது விவசாயிகள் பாடிவந்த சான்டோ டியோசு என்ற சமய நாட்டார் பாடலை ஒட்டி அமைந்தது.[1]

அந்தாலூசிய தேசிய நாளாக, டியா தெ அந்தாலூசியா (அந்தாலூசியா நாள்), ஒவ்வொரு பெப்ரவரி 28 அன்றும் கொண்டாடப்படுகின்றது.

Remove ads

புவியியல்

Thumb
அந்தாலூசிய நிலப்பரப்பின் முதன்மைகூறுகளின் அமைவிடங்கள்.

அந்தாலூசியா எசுப்பானியாவின் 17 தன்னாட்சிப் பகுதிகளில் ஒன்றாகும். is one of the 17 Spanish autonomous communities and is in the southwestern region of the ஐரோப்பிய ஒன்றியத்தின் தென்மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ளது.[4] இதன் பரப்பளவு 87,597 சதுர கி.மீ. (33,821 ச மை), இது எசுப்பானியாவின் பரப்பளவில் 17.3 விழுக்காடு ஆகும்.

இதன் இயற்கை எல்லைகள்: தெற்கில், அத்திலாந்திக்குப் பெருங்கடலும் நடுநிலக் கடலும்; வடக்கில் சியர்ரா மொரெனா மலைத் தொடர்; மேற்கில் போர்த்துகல்; கிழக்கில் மூர்சியா வட்டாரம்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads