அனகாபுத்தூர் இராமலிங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஆவார். அண்ணாவின் மறைவுக்குப்பின் கருணாநிதி, திமுக தலைவராகவும், தமிழக முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த ம.கோ.இரா., தானே பொருளாளராக இருந்தும், வேறு அழுத்தம் காரணமாக கணக்கு கேட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[சான்று தேவை] புதியக் கட்சி தொடங்க விரும்பிய ம.கோ.இரா,அப்போது இவர் தொடங்கியிருந்த ‘அ.தி.மு.க.’ என்ற கட்சியில்[1] தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன்[2], இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார்.[3] நெசவு தொழில் செய்து வந்த ராமலிங்கம் அனகாபுத்தூர் நகராட்சி தலைவராகவும், கோ-ஆப்டெக்ஸ் தலைவராகவும் இருந்தார்.
Remove ads
வாழ்க்கை
ராமலிங்கத்துக்கு 2 மனைவிகள். முதல் மனைவி லட்சுமி அம்மாளுக்கு சுடர்க்கொடி, மரகத மணி, நாகம்மாள் என்ற பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மனைவி லட்சுமி இறந்த பிறகு இரண்டாவதாக சின்னம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சுப்புலட்சுமி, அண்ணாதுரை, சின்னசாமி என்ற பிள்ளைகள் உள்ளனர். தற்போது சின்னம்மாள், அனகாபுத்தூரில் தன்னுடைய மகள் சுப்புலட்சுமியின் வீட்டில் வசித்து வருகிறார்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads