அன்பின்நகரம்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

அன்பின்நகரம்
Remove ads

அன்பின்நகரம் (Anbinnagaram) என்பது தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமப் பகுதியாகும். போதகர். சி. டி. இ. ரேனியஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஊரில் நான்கு தெருக்கள் மட்டுமே இருக்கின்றன. இது முதலூர் ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது.[2]

விரைவான உண்மைகள் அன்பின்நகரம், நாடு ...
Thumb
அன்பின்நகரம் கிறித்துவ தேவாலயம்
Remove ads

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தூத்துக்குடிக்குத் தெற்கே 55 கிலோமீட்டர் தொலைவிலும், சாத்தான்குளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 671 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[3]

மக்கள்

இந்த ஊரில் வசிப்பவர்கள் அனைவரும் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் கருமேனி ஆற்று ஓடை உள்ளது. இந்த ஓடையில் மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஓடுகிறது.

ஆலய விழாக்கள்

இவ்வூரின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை பெரிய வாரத்திலும், கோபுர பிரதிஷ்டை பண்டிகை மே மாத முதல் வாரத்திலும் நடைபெறும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads