அபிராமி (நடிகை)
திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
அபிராமி (ⓘ) (திவ்யா கோபிகுமார், பிறப்பு: 26 ஜூலை 1983) இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
இவர், புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை, 2009 திசம்பர் 27 அன்று திருமணம் செய்து கொண்டார்.[2][3] இவர்களது திருமணத்திற்கு திரைப்படத்துறையில் இருந்து யாரும் அழைக்கப்படாமல் மிகவும் எளிமையான முறையில் பெங்களூரில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள் , பதினைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களிப்புகள்
வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் பன்னிரண்டு இதர மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதுயுகம் தொலைக்காட்சியில் ரிஷிமூலம் எனும் தொடரின் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.
நடித்த திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
2019 || சார்லி சாப்லின்- 2 || மைதிலி ராமகிருஷ்ணன் || 2021 || மாறா || செல்வி || 2021 || சுல்தான் || அன்னலெட்சுமி ||
சான்றுகளும் மேற்கோள்களும்
- "அபிராமியுடன் ஒரு பேட்டி". thehindu.com. 2003-05-14. Archived from the original on 2016-01-24. Retrieved 2015-06-02.
- "വിവാഹം ആരെയും അറിയിക്കാതെ..." Mangalam.com. 2014-03-10. Retrieved 2015-06-02.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads