அமர்நாத் தாக்குதல், 2017
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமர்நாத் தாக்குதல், 2017 என்பது அமர்நாத் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த இந்து மதப் பயணிகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலாகும். 10 ஜூலை 2017 அன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் இத்தாக்குதல் நடைபெற்றது. இத்தீவிரவாதத் தாக்குதலில் ஏழு மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சார்ந்தவர்களாவார். கொல்லப்பட்டவர்களில் அறுவர் பெண்களாவார். மேலும் 19 பேர் காயமடைந்தனர்.[1][2] இத்தாக்குதல் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.[3][4][5][6]

Remove ads
பின்புலம்
48 நாட்கள் வருடாந்திரப் புனித யாத்திரை 6,00,000 மக்களால் 130 அடி பனி லிங்கத்தைத் தரிசிக்க 12,756 அடி உயர இமயமலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த புனித யாத்திரையினால் வசூலிக்கப்படும் வரியானது மாநில அரசிற்கு வருவாயை ஈட்டுவதாக இருந்தது. இதைச் சீர்குலைக்கும் விதமாய் காஷ்மீரிய இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் பல முறை பயணிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் தொடர்ச்சியாய் இந்த வருடத் தாக்குதலும் நடத்தப்பட்டது.[7][8][9][10][11]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads