அமிசி பட்டகம்

From Wikipedia, the free encyclopedia

அமிசி பட்டகம்
Remove ads

அமிசி பட்டகம் (Amici prism) என்பது வானியலாளர் ஜியோவானி அமிசி உருவாக்கிய  ஒரு பட்டகம் ஆகும். இது நிறமாலை மானிகளில்  பயன்படுத்தப்படும் நிறப் பிரிகை உண்டாக்கும் கூட்டுப் பட்டகமாகும். இது இரண்டு முப்பட்டகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு முப்பட்டகம் குறைந்த நிறப்பிரிகை திறன் கொண்ட கிரௌன் கண்ணாடியால் ஆனது; மற்றொரு முப்பட்டகம் அதிக நிறப்பிரிகை திறன் கொண்ட ஃபிளிண்ட் கண்ணாடியால் ஆனது.  முதல் முப்பட்டகத்தில் நுழையும் ஒளியானது காற்று-கண்ணாடியிடையே நுழைந்து ஒளிவிலகலடைந்து, மீண்டும் இரு பட்டகங்களுக்கிடையே ஒளிவிலகலடைகிறது. கடைசியில் ஒளி இரண்டாவது பட்டகத்திற்குச் செங்குத்தாக வெளிவருகிறது.

Thumb
ஒரு அமிசி பட்டகம்
Thumb
இரட்டை அமிசி பட்டகத்தின் பிரிவுகள்
Thumb
அமிசி பட்டகத்தில் ஒளி செல்லும் பாதையை வரைகலை கதிர் மூலம் கண்டறியும் முறை
Thumb
அமிசி பட்டகத்தின் மூலம் சி.எஃப்.எல் விளக்கைப் பார்க்கும் போது உருவாகும் படம்

உட் செல்லும் அலைகளில் நடுவிலுள்ள அலை அல்லது ஒரு அலை நீளம் (நிறம்) மட்டும் விலகல் அடையாமல் உட் செல்லும் கற்றைக்கு இணையாக வெளிவருமாறு பட்டகங்களின் மூலப்பொருட்களும்,  கோணங்களும் அமைக்கப்பட்டிருக்கும். பட்டகங்களின் அமைப்பை நேரடி-தோற்ற பட்டகம் என அழைக்கலாம். கையால் தூக்கிச் செல்லும் அளவிலுள்ள நிறமாலைமானிகளில், இவை பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் மற்ற அலைநீளங்கள் அனைத்தும் பல்வேறு கோணங்களில் பட்டகங்களின் மூலப்பொருளைப் பொறுத்து நிறப்பிரிகை அடைகின்றன.  ஒரு ஒளி மூலத்தை பட்டகம் வழியாக பார்க்கும் போது கட்புலனாகும் நிறமாலை உருவாகிறது. 

1860 ல் அமிசி, இவ்வகை பட்டகங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து மூன்று பட்டகங்களை இணைத்து இரட்டை அமிசி பட்டகத்தை உருவாக்கினார்.[1][2] பட்டகங்களை இரட்டிப்பு ஆக்குவதன் மூலம் கோண நிறப்பிரிகை அதிகரிக்கிறது. இதன் மூலம் மைய அலை வந்த பாதையிலே ஒளிவிலகலடைகிறது.  உள் நுழையும் அலைகளில் மைய அலை மட்டும் எந்த விலகலும் இன்றி, தனது பாதையிலே செல்கிறது.

இந்த விலகலடையப் பட்டகத்தைப் பற்றி அமிசி எதிலும் பிரசுரிக்கவில்லை. நட்சத்திரங்களின் நிறமாலையை ஆராய கருவியைக் கண்டறிந்த அமிசி  நண்பர் டொனாட்டி இந்த பட்டகத்தைத் தனது கருவியில் பயன்படுத்தினார்.[3] பின்னர், இந்த அமைப்பின் அடிப்படையில் பன்மடி பட்டகங்கள்  (Multiple prism) உருவாக்கப்பட்டன. பன்மடி பட்டக நிறப்பிரிகை கோட்பாட்டின் படி (Multiple-prism dispersion theory) அமிசியின் பட்டகம் செயல்படும் விதம் கணக்கிடப்பட்டது.[4]

அமிசியின் நிறப்பிரிகை பட்டகம்  போல் நிறப்பிரிகை செய்யாத அமிசியின் கூரைப் பட்டகமும் உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads