அமிர்தசாகரர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அமிர்தசாகரர் [1] ஓர் இலக்கண ஆசிரியர். யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் யாப்பிலக்கண நூல்களை இயற்றியவர். அமுதசாகரம் என்னும் நூலும் இவரால் இயற்றப்பட்டது. இவரது காலம் 11 ஆம் நூற்றாண்டு. யாப்பருங்கலம் நூலுக்குப் பழைய விருத்தியுரை ஒன்று உண்டு. யாப்பருங்கலக் காரிகைக்கு இவரது மாணாக்கர் குணசாகரர் உரை எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் சமணர்கள்.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005
  • அமிர்தசாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகை மூலமும் குணசாகரர் இயற்றிய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை பதிப்பு, 1965
  • அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் (பழைய விருத்தியுரையுடன்), பதிப்பாசிரியர் வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, Madras Government Oriental Manuscripts Series No. 66, 1960

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads