அமெரிக்கன் எயர்லைன்ஸ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அமெரிக்காவினை முதன்மை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு விமானச் சேவையாகும். இது 1931 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, தனது முதல் விமானச் சேவையினை 1934 ஆம் ஆண்டு தொடங்கியது. இது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான இலக்குகளை மிக அதிகமாகக் கொண்டு செயல்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கை, விமானக்குழுவின் அளவு மற்றும் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இதுவே உலகின் மிகப்பெரிய விமானச் சேவையாகும். அத்துடன் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டிருப்பதில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தனது முக்கிய தலைமையகமாக டல்லாஸ் / ஃபோர்ட் வொர்த் பகுதியினையும், அதன் தலைமையகங்களாக சார்லோட், லாஸ் ஏஞ்சல்ஸ், ஜாண் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையம் (நியூயார்க்), மியாமி, ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையம், சிகாகோ, பிலடெல்பியா, பொனிக்ஃஸ் மற்றும் வாஷிங்க்டன் பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் முதன்மை பராமரிப்பு மையமாக துல்சா சர்வதேச விமான நிலையம் இருந்தபோது, இந்நிறுவனம் ஃபோர்ட் வொர்த்தினை (டெக்ஸாஸ்) தலைமையகமாகவும், போஸ்டன், லண்டன் ஹீத்ரு, நியூயார்க்-லாகார்டியா மற்றும் சேன் ஃபிரான்சிஸ்கோ போன்றவற்றினை தேவைப்படும் வேளைகளில் பயன்படுத்தியது.[5] இந்த விமானச் சேவை முதன்மையாக டெல்டா, யுனைடெட் மற்றும் சௌத்வெஸ்ட் ஆகிய விமானச் சேவைகளுடன் போட்டியிடுகிறது.

விரைவான உண்மைகள் IATA, ICAO ...

ஒன்வேர்ல்டு விமானச் சேவை கூட்டணியின் நிறுவன உறுப்பினராக உள்ளது. அத்துடன் கட்டண நிர்ணயம், சேவைகள் மற்றும் கால அட்டவணையிடுவதில் பிரித்தானிய ஏர்வேஸ், ஃபின்னையர் மற்றும் அட்லாண்டிக் கடலுக்கு அப்பாற்பட்ட சந்தையில் இபேரியா மற்றும் பசுபிக் கடலுக்கு அப்பாற்பட்ட சந்தையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. உள்பகுதி விமானச் சேவைகளை, இவை சுதந்திரமாக தீர்மானிக்கின்றன. துணை விமானங்களின் விமானச் சேவையினை அமெரிக்கன் ஈகிள் என்ற வியாபாரக் குறியுடன் செயல்படுத்தி வருகின்றன.[6]

ஏஎம்ஆர் கார்பரேஷன் என்ற நிறுவனம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முந்தைய முன்னோடி நிறுவனமாகும். நவம்பர் 2011 இல் பகுதி 11 திவால் பாதுகாப்பு [7][8] மற்றும் பிப்ரவரி 2013 இல் யுஎஸ் ஏர்வேஸ் குழுவுடன் இணைவதற்கான அறிவிப்பு போன்றவை உலகின் மிகப்பெரிய விமானச் சேவையாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினை வலுப்பெறச் செய்தது.[9][10] ஏஎம்ஆர் மற்றும் யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனங்கள் டிசம்பர் 9, 2013 இல் தங்களது இணைப்பினை உறுதி செய்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் குழுவாக வலுப்பெற்றது. இந்த இணைந்த சேவை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என்ற பெயருடன் தனது முந்தைய தலைமையகங்களான சார்லோட், பிலாடெல்பியா, பொனிக்ஃஸ் மற்றும் வாஷிங்க்டன் ஆகிய இடங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது செயல்படும். இந்நிறுவனத்தில் தர்போது சுமார் 1,20,000 மக்கள் வேலை செய்கின்றனர்.[11][12]

Remove ads

இலக்குகள்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நான்கு கண்டங்களுக்கும் தனது விமானச்சேவையினை டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் முன்னிலையில் செயல்படுத்துகிறது. இவை இரண்டும் சேர்த்து ஆறு கண்டங்களுக்கு விமானச்சேவைகளை புரிகிறது. தலைமையகங்களான டால்லாஸ் / ஃபோர்ட்வொர்த் மற்றும் மியாமி போன்றவை அமெரிக்காவின் நுழைவு வாயில் போன்று செயல்படுகின்றன. தலைமையகங்களான பிலாடெல்பியா மற்றும் நியூயார் கென்னடி போன்றவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் நுழைவு வாயிலாக செயல்படுகின்றன. இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸின் தலைமையகம், ஆசியாவின் முதன்மை நுழைவு வாயிலாகவும், பொனிக்ஃஸ் பகுதிகள் மெக்சிகோ மற்றும் ஹவாய்க்கு முதன்மை நுழைவு வாயிலாகவும் செயல்படுகின்றன.

லம்பெர்ட்-ஸெயின் லுயிஸ் சர்வதேச விமான நிலையம் பல்வேறு உள்நாட்டு பகுதிகளுக்கு தலைமையகமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இருப்பினும் 2009 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மறுசீரமைப்பினால், ஏப்ரல் 5, 2010 இல் இந்த விமான நிலையம் நீக்கப்பட்டது.[13] இந்த விமானச் சேவை, டெல்டா ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்கு அடுத்தபடியாக அதிகப்படியான சர்வதேச இலக்குகளைக் கொண்டுள்ளது.

டிசம்பர் 19, 2014 இன் படி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முக்கிய விமான நிலையங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலதிகத் தகவல்கள் Rank, விமான நிலையம் ...
Remove ads

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் – உயர்தர வழித்தடங்கள்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நியூயார்க் – மியாமி, நியூயார்க் – சார்லோட், சிகாக்கோ – நியூயார்க் மற்றும் வாஷிங்க்டன் – சார்லோட் ஆகிய வழித்தடங்களை தனது உயர்தர வழித்தடங்களாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 155, 155, 144 மற்றும் 140 விமானங்களை இந்நிறுவனம் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமானங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் – ஆக்லாண்ட் மற்றும் ஃபோர்டலெஸா – மியாமி ஆகிய வழித்தடங்களில் கொண்டுள்ளது.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads