அமெரிக்க இலங்கை மறைப்பணி

From Wikipedia, the free encyclopedia

அமெரிக்க இலங்கை மறைப்பணி
Remove ads

அமெரிக்க இலங்கை மறைப்பணி (American Ceylon Mission, ACM) என்பது இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஒரு கிறித்தவ மறைப்பணி அமைப்பாகும். இவ்வமைப்பு "பிறநாடுகளுக்கு மறைப்பணியாளர்களை அனுப்பும் அமெரிக்க அமைப்பினால்" (American Board of Commissioners for Foreign Missions, ABCFM) நிதியுதவி அளிக்கப்பட்டு 1813 ஆம் ஆண்டில் இலங்கை வந்த மதப்பணியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய, இலங்கை பிரித்தானியக் குடியேற்ற அரசு இவர்களை ஒப்பீட்டளவில் சிறிய யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு மட்டுமே (ஏறத்தாழ 40 ஆண்டு காலத்திற்கு) வருவதற்கு அனுமதி அளித்தனர். இந்த மறைப்பணியாளர்களின் தாக்கம் இலங்கையில் குறிப்பாக 1820கள் தொடக்கம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரை இருந்து வந்தது. இக்காலப் பகுதியில், அவர்கள் கிறித்தவ மறைப்பரப்புடன், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு, நூல்கள் அச்சிட்டு வெளியிடல், தொடக்க, மற்றும் உயர் கல்விக்கூடங்கள் நிறுவுதல், யாழ் குடாநாட்டு மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டனர். உள்ளூர் சமய, மற்றும் சடங்குகளுக்கு எதிரான தமது பரப்புரைகளை பிரசுரங்கள் வாயிலாக வெளியிட்டனர். இந்நடவடிக்கைகள் இலங்கைத் தமிழர் வாழ்வில் பெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. இம்மாற்றங்கள் அவர்களின் வாழ்வில் இன்றளவும் தொடர்கின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்றுள்ள குறிப்பிடத்தக்க சில கல்வி, மருத்துவ நிலையங்கள் அமெரிக்க மறைப்பணியாளர்களின் உதவியுடன் நிறுவப்பட்டவையே.[1]

Thumb
யாழ்ப்பாணத்தில் அமெரிக்க இலங்கை மறைப்பணியைச் சேர்ந்த சில மறைப்பணியாளர்கள், 1890கள்
Remove ads

வரலாறு

பட்டிக்கோட்டா செமினறி

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads