அடுத்தடுத்து மூன்று தேசியக்கொடிகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் கொடிகளாக (flags of the Confederate States of America) இருந்துள்ளன. இவை 1861 முதல் 1865 வரை இருந்த கூட்டமைப்பு மாநிலங்கள் அல்லது கூட்டமைப்பின் ("Confederate States" அல்லது "Confederacy") அலுவல்முறையான தேசியக் கொடிகளாக விளங்கின.
விரைவான உண்மைகள் பிற பெயர்கள், பயன்பாட்டு முறை ...
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு
 |
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் முதல் தேசியக் கொடி. |
பிற பெயர்கள் |
"விண்மீன்களும் பட்டைகளும்" |
பயன்பாட்டு முறை |
தேசியக் கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag |
ஏற்கப்பட்டது |
மார்ச்சு 4, 1861 (முதல் 7-விண்மீன் வடிவம்) நவம்பர் 28, 1861 (இறுதி 13-விண்மீன் வடிவம்) |
வடிவம் |
சம உயரமுள்ள சிவப்பு, வெள்ளை என்று மாறுகின்ற மூன்று நேர்க்கிடை பட்டைகளும் நீலநிற மேல் வலது காற்சதுரத்தில் வெள்ளை வண்ணத்தில் வட்டமாக அமைந்த ஒரே அளவிலான ஐம்முனை கொண்ட விண்மீன்களும் |
வடிவமைப்பாளர் |
நிக்கோலா மார்ச்சல் |
 |
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பபின் இரண்டாவது தேசியக்கொடி |
பிற பெயர்கள் |
"எஃகு பதாகை"[a] |
பயன்பாட்டு முறை |
தேசியக்கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag |
அளவு |
1:2[b] |
ஏற்கப்பட்டது |
மே 1, 1863 |
வடிவம் |
இரு பங்கு அகலமும் ஒரு பங்கு உயரமும் கொண்ட வெள்ளை செவ்வகத்தின் இடது மேல் முனையில் சிவப்பு காற்சதுரத்தில் வெள்ளைகரையுடன் கூடிய நீல வண்ண பெருக்கல் குறியில் ஒரே அளவிலான ஐம்முனை கொண்ட்ட 13 விண்மீன்கள் இருந்தன |
வடிவமைப்பாளர் |
வில்லியம் தப்பன் தாம்சன் [c][1][2][4][5][6][7] |
 |
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் மூன்றாவது தேசியக் கொடி. |
பிற பெயர்கள் |
"குருதிக்கறைபட்ட பதாகை" |
பயன்பாட்டு முறை |
தேசியக் கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag |
அளவு |
2:3 |
ஏற்கப்பட்டது |
மார்ச்சு 4, 1865 |
வடிவம் |
இரு பங்கு அகலமும் ஒரு பங்கு உயரமும் கொண்ட வெள்ளை செவ்வகத்தின் வலது கோடியில் நெடுங்கிடையாக சிவப்பு பட்டையும் இடது மேல் முனையில் சிவப்பு காற்சதுரத்தில் வெள்ளைகரையுடன் கூடிய நீல வண்ண பெருக்கல் குறியில் ஒரே அளவிலான ஐம்முனை கொண்ட்ட 13 விண்மீன்கள் இருந்தன[d] |
வடிவமைப்பாளர் |
ஆர்தர் எல். ரோஜர்சு[10] |
மூடு
அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்த பிறகும் கூட்டமைப்பின் கொடிகள் தனிப்பட்ட அலலது அலுவல்முறையான பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவையும் இவற்றை அடிப்படையாகக் கொண்டவையும் ஐக்கிய அமெரிக்காவின் மெய்யியல், அரசியல், பண்பாடு, மற்றும் இனக்காழ்ப்பு சர்ச்சைகளில் இடம் பெற்றுள்ளன. மாநிலங்களில், நகரங்களில், கவுன்ட்டிகளில் காட்சிப்படுத்தப்படும் கொடிகள், பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகங்களின் கொடிகள் தனியார் நிறுவனங்கள்/சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் மேற்கண்ட காரணங்களை ஒட்டி பயன்படுத்துகின்றனர்.