அமேலியா ஏர்ஃகாட்

From Wikipedia, the free encyclopedia

அமேலியா ஏர்ஃகாட்
Remove ads

அமேலியா மேரி ஏர்ஃகாட் (Amelia Mary Earhart) (பிறப்பு சூலை 24, 1897; காணாது போனது சூலை 2, 1937; சட்டப்படி மரணித்ததாக அறிவிப்பு சனவரி 5, 1939) ஓர் புகழ்பெற்ற அமெரிக்க வானூர்தி ஓட்டும் ஆர்வலர்,முன்னோடி மற்றும் எழுத்தாளர்.[1] [N 1] ஏர்ஃகாட் அமெரிக்காவின் சிறப்புமிக்க பறக்கும் சிலுவை (Distinguished Flying Cross) வழங்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.[3] அவர் தனிவானூர்தியில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.[4] வான்பயணத்தில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்,[2] பறக்கும் அனுபவங்களை குறித்து கூடுதலாக விற்கப்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.பெண் விமானிகளுக்கான தொண்ணூற்று ஒன்பது என்ற அமைப்பை நிறுவுவதில் தூண்டுகோலாக இருந்தார்.[5] 1935ஆம் ஆண்டில் பர்டியூ பல்கலைக்கழகத்தில் வான்வழிப் பயணத் துறையில் வருகை விரிவுரையாளராக இருந்து பெண்கள் இத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தார்.மேலும் தேசிய பெண்கள் கட்சி உறுப்பினராகவும் சம உரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாளராகவும் இருந்தார்.

விரைவான உண்மைகள் அமேலியா ஏர்ஃகாட், பிறப்பு ...

1937ஆம் ஆண்டு உலகைச் சுற்றிவரும் முயற்சியில், பர்டியூ நிதியளித்த லாக்யீட் மாடல் 10 எலெக்ட்ரா வானூர்தியில் பறக்கையில், ஏர்ஃகாட் மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹவுலாந்து தீவு அருகே காணாமல் மறைந்தார்.அவருடைய வாழ்க்கை,பணிவாழ்வு,காணாமல் போனது என இன்றுவரை ஆர்வமூட்டுவதாக உள்ளது.[N 2]

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads