அம்பாசா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்பாசா (Ambassa (Pron:/æmˈbæsə/)) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்திலுள்ள தலாய் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.


Remove ads
புவியியல் அமைப்பு
23°55’10.8’’ வடக்கு 91°50’42’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அம்பாசா நகரம் பரவியுள்ளது.
மக்கள்தொகையியல்
இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] அம்பாசா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 6,052 பேர் ஆகும். இம்மக்கள் தொகையில் 54% பேர் ஆண்கள் மற்றும் 46% பேர் பெண்கள் ஆவர். நகரத்தின் கல்வியறிவு சதவீதம் 70% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 60 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 40 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறு வயதிற்குக் குறைவான சிறுவர்கள் 13% அளவில் உள்ளனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads