அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளை (1876 – 1927) தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார்.
பிறப்பும், இசைப் பயிற்சியும்
கண்ணுசுவாமி பிள்ளை தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் அம்மாசத்திரம் எனும் ஊரில், சுந்தரம் எனும் நாட்டியப் பெண்மணியின் மகனாகப் பிறந்தார். தான் வசித்த வீட்டின் எதிர்வீட்டிலிருந்த நட்டுவனாரிடம் தவிலும், பாட்டும் கற்றுக்கொண்டார் கண்ணுசுவாமி.
இசை வாழ்க்கை
புகழ்பெற்ற நாதசுவரக் கலைஞர்களான திருமருகல் நடேச பிள்ளை, செம்பனார்கோவில் ராமசுவாமி பிள்ளை, மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை, டி. என். ராஜரத்தினம் பிள்ளை ஆகியோருக்கு இவர் தவில் வாசித்துள்ளார்.
திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளை, திருமுல்லைவாயில் முத்துவீர்பிள்ளை ஆகியோர் இவரிடம் தவில் கற்ற மாணவர்கள். வழிவூர் வீராசுவாமி பிள்ளை, டி. என். ராஜரத்தினம் பிள்ளை ஆகியோர் இவரிடம் நாதசுவரம் கற்ற மாணவர்கள் ஆவர்.
Remove ads
இறப்பு
19 மார்ச் 1927 அன்று திருவிழந்தூரில் காலமானார்.
உசாத்துணை
- பக்கம் எண்கள்:286 - 290, பி. எம். சுந்தரம் எழுதிய மங்கல இசை மன்னர்கள் நூல் (முதற் பதிப்பு, டிசம்பர் 2013; வெளியீடு: முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - 17.)
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads