அம்மூவனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்மூவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 127 பாடல்கள் இவர் பாடியனவாகக் காணப்படுகின்றன.
'மூவன்! என்னும் இயற்பெயரை உடையவர் எனவும், சிறப்புக் கருதி 'அம்' என்னும் அடைசேர்த்து வழங்கப் பெற்றவர் எனக் கருதப்படுகிறார். சேரன், பாண்டியன், மலையமான் போன்றோரால் ஆதரிக்கப்பெற்றவர். தொண்டி, மாந்தை, கொற்கை, கோவலூர் ஆகியவற்றை வியந்து பாடியுள்ளார்.[1]
- அகநானூறு (10, 35, 140, 280, 370, 390) - 6 பாடல்
- ஐங்குறு நூறு (இரண்டாம் நூறு - நெய்தல் திணை) - 100 பாடல்
- குறுந்தொகை (49 [2], 125 [3], 163 [4], 303 [5], 306 [6], 318 [7], 327 [8], 340 [9], 351 [10], 397[11], 401[12]) -11 பாடல்
- நற்றிணை 4[13], 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397) - 10 பாடல்
இவற்றில் குறுந்தொகை 127 குறிஞ்சித்திணை. நற்றிணை 397 பாலைத்திணை. ஏனைய 125 பாடல்களும் நெய்தல் திணை.
Remove ads
ஐங்குறு நூறு - நெய்தல் திணை
- ஐங்குறு நூறு 101-110-தாய்க்கு உரைத்த பத்து (பாடல் எண் 101-110)
- ஐங்குறு நூறு 111-120-தோழிக்கு உரைத்த பத்து (பாடல் எண் 111-120)
- ஐங்குறு நூறு 121-130-கிழவர்க்கு உரைத்த பத்து (பாடல் எண் 121-130)
- ஐங்குறு நூறு 131-140-பாணற்கு உரைத்த பத்து (பாடல் எண் 131-140)
- ஐங்குறு நூறு 141-150-ஞாழல் பத்து (பாடல் எண் 141-150)
- ஐங்குறு நூறு 151-160-வெள்ளாங்குருகுப் பத்து (பாடல் எண் 151-160)
- ஐங்குறு நூறு 161-170-சிறுவெண் காக்கைப் பத்து (பாடல் எண் 161-170)
- ஐங்குறு நூறு 171-180-தொண்டிப் பத்து (பாடல் எண் 171-180)
- ஐங்குறு நூறு 181-190-நெய்தல் பத்து (பாடல் எண் 181-190)
- ஐங்குறு நூறு 191-200-வளைப் பத்து (பாடல் எண் 191-200)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads