அய்யங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐயங்கார்குளம் சஞ்சீவிராய சுவாமி (அனுமன்) திருக்கோயில் காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில்.[1]
ராம ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கமடைந்த போது, லட்சுமணனுக்காக சஞ்சீவி மலையை எடுத்துச் சென்ற ஆஞ்சநேயர் சிறிது இளைப்பாறிய தலம் எனப்படுகின்றது. [1]
மூலவராக சஞ்சீவிராயர் எனும் அனுமரும் இவருக்கு எதிரே ராமன், சீதை, லட்சுமணர் ஆகியோரும் அமைந்துள்ளனர்.
Remove ads
ஐயங்குளம் எனும் திருக்குளம்
130 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி போன்று திருக்குளம் அமைந்துள்ளது. [1]
குளம் தோன்றிய வரலாறு
விஜயநகர பேரரசின் நாயக்க மன்னரின் அமைச்சராக இருந்த எச்சூர் தாதாச்சாரியார் பொன் பொருளோடு இவ்வூர் வழியே பயணம் செய்தபோது வழிப்பறிக்கொள்ளையரால் சூழப்பட்டார். ஆபத்தில் காக்க வேண்டி, ராமரை வேண்டி நின்றார் எச்சூர் தாதாச்சாரியார். அப்போது கூட்டமாக வந்த குரங்குகள் கொள்ளையர்களைத் தாக்கித் துரத்தின.
அதன்பின் இத்திருத்தலத்து ஆஞ்சநேயர் மீது பக்தி கொண்ட அவர் ஏதேனும் திருப்பணி செய்ய விரும்பி இந்த பிரம்மாண்டமான குளத்தை அமைத்தார். இக்குளம் தாத சமுத்திரம் என்றும் ஐயங்கார் குளம் என்றும் புகழ் பெற்றது.
இவரே ’ஸ்ரீ அனுமத் விம்சதி’ என்ற தோத்திரப் பாடலையும் இயற்றினார். இத்தலத்து அனுமரை வழிபடுவது ராமபிரானின் பாதங்களில் சரணடைவதற்கு ஒப்பானது என அப்பாடல்களில் குறிப்பிடுகின்றார். [1]
Remove ads
நடவாவிக் கிணறு
திருக்குளத்தின் வடக்கே விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட நடவாவிக் கிணறு அமைந்துள்ளது. கிணற்றுக்குள் செல்ல படிகள் உள்ளன. கீழே சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கருங்கல்லில் அமைந்த பதினாறு கால் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அபூர்வமான அமைப்பு இது. [1]
சித்ரா பௌர்ணமி அன்று இந்த நடவாவியில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளும் ராம, லட்சுமண, சீதாதேவியும் இக்கிணற்றில் எழுந்தருளுவர்.[2]
2013 ஆம் ஆண்டு நடவாவி கிணற்றில் மறைந்திருந்த பாதை கண்டுபிடிக்கப்பட்டது.[3]
Remove ads
அமைவிடம்
காஞ்சிபுரம், கலவை சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து ஏழு கி.மீ தொலைவில் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதிகள் உண்டு, சித்ரா பௌர்ணமி போன்ற விழா சமயம் இரவும் பங்கு (ஷேர்) ஆட்டோ வசதியுள்ளது.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads