அரங்கநாயகி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரங்கநாயகி (ஆங்கிலம்: Ranganayaki, சமஸ்கிருதம்: रङ्गनायकी, romanized: Raṅganāyakī, பொருள்: 'ரங்கநாதரின் மனைவி'), ஒரு இந்து தெய்வம் ஆவார். தாயார் என்று அடைமொழியிட்டு அழைக்கப்படும் இவர்,[1] ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலின் முதன்மையான பெண் தெய்வம் ஆவார்.[2] அவள் ஸ்ரீரங்கத்தின் வழிபாட்டு தெய்வமும் விஷ்ணுவின் அவதாரமுமான ரங்கநாதரின் மனைவி. லட்சுமியின் அவதாரமான இவரை ரங்கநாயகி நாச்சியார் என்றும் பெரிய பிராட்டி என்றும் அழைப்பர்.[3]
ரங்கநாயகி ஸ்ரீரங்கத்து மக்களாலும், வைணவர்களாலும் பெரிதும் போற்றப்படும் தெய்வமாவார். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி இவர் அரங்கநாதருக்கு இணையாகக் கருதப்படுகிறார். தெய்வீக தம்பதியினரை வழிபடுவதற்கான வழிமுறைகளின் முதலும் முடிவுமாகக் கருதப்படுபவர்.
Remove ads
மேற்கோள் தரவுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads