அரசின்மை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரசின்மை அல்லது அராசகம் (Anarchism) என்பது அரசு, சமயம், நிறுவனம் போன்ற அதிகார மையங்களுக்கு எதிரான ஓர் அரசியல் கோட்பாடு ஆகும். மனித செயற்பாடுகளில் அரசை அல்லது அதிகாரத்தை மட்டுப்படுத்துவதை அல்லது இல்லாமல் செய்வதை இது நோக்கமாகக் கொண்டது.[1][2][3][4] படிநிலை அரசமைப்பின்றி தனியான முழுச் சுதந்திர அமைப்பான நிறுவனக் கொள்கையாக பல எழுத்தாளர்கள் இதனை வரையறுக்கிறார்கள்.[5][6][7][8] அரசின்மை விரும்பத்தக்கதன்று, தேவையற்றது மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்ற கருத்தும் உள்ளது.[9][10]
பல்வேறு விவகாரங்களில் அரசின் தலையீட்டினை எதிர்ப்பதே அரசின்மையின் அடிப்படை ஆகும்.[11] அராஜகவாதத்தின் சில கூடங்கள், மனித உறவுகளின் நடத்தைகளின் மீது தொடுக்கப்படும் வேறுவிதமான அதிகாரங்களை எதிர்க்கின்றன.அரசின்மை அல்லது அராஜகவாதம் பல்வேறு பொருளாதார அமைப்புகளுடன் இணக்கமாக உள்ளது. அவை பொதுவுடைமை,புவிசார், பரஸ்பர மற்றும் சமத்துவ வடிவங்களாக உள்ளன.[12][13] அராஜகவாத பொருளாதாரம் மற்றும் அராஜகவாத சட்ட தத்துவம் ஆகியவை கம்யூனிசம், பொதுக்கூட்டுடைமை, கூட்டோச்சற் கொள்கை, பரஸ்பரவாதம் அல்லது பங்களிப்பு பொருளாதாரம் ஆகியவற்றில் எதிரொலிக்கின்றன.[14] அராஜகவாதம் ஒரு தனித்துவமான உலகக் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு நிலையான கோட்பாட்டை வழங்காது, அதற்கு பதிலாக ஒரு தத்துவமாக நெகிழும் அல்லது பாயும் தன்மையைக் கொண்டுள்ளது.[15] பல வகையான அரசின்மை மரபுகள் இருப்பினும் அவைகளுள் அனைத்தும் ஒத்த தனித்துவம் கொண்டதல்ல.[16] சிந்தனையின் அராஜகவாத பள்ளிகள் அடிப்படையிலேயே வித்தியாசமாக வேறுபடுகின்றன, தீவிர தனிநபர்வாதத்திலிருந்து எந்தவொரு ஆதரவையும் கூட்டுவாதத்தை நிறைவு செய்ய உதவுகின்றன. அராஜகவாதத்தின் விகாரங்கள் பெரும்பாலும் சமூக மற்றும் தனிநபர் அராஜகவாதம் அல்லது இதேபோன்ற இரட்டை வகைப்பாடு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[17][18]
அராஜகவாதம் பொதுவாக ஒரு தீவிர இடதுசாரி சிந்தனையாகக் கருதப்படுகிறது இதன் கருத்துருவுக்கான சொல் முதலில் ஆட்சியாளரின்றி எனப் பொருள்படும் கிரேக்கமொழியில் உருவாகி அதே பொருளுடன் வேறு மொழிகளுக்கும் பரவியது. அராஜகம் என்பது இதே பொருள் கொண்ட சமசுகிருதச் சொல்லாகும். அரசியலுக்கான சுருக்க ஆக்சுபோர்ட் அகரமுதலியில் (The Concise Oxford Dictionary of Politics) கொடுத்துள்ளபடி, அராஜகம் என்பது, இறுக்கமான அரசு இல்லாமல் ஒரு சமூகத்தை ஒழுங்கமைக்க முடியும் என்றும், ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் கருதும் ஒரு நோக்கு ஆகும். எனினும் பல்வேறு கருத்துநிலைகள் அரசின்மை கோட்பாட்டில் உள்ளன.
Remove ads
வரலாறு
தோற்றம்

ஆரம்பகால அரசின்மைக் [19] கருப்பொருள்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தாவோயிஸ்டு தத்துவவாதி லொஜோவின் படைப்புகளில் காணலாம், நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஜுவாங்சி மற்றும் பாவ் ஜிகியான் ஆகியோரும் இதனை முன்னெடுத்தனர்.[20][21] ஜுவாங்சியின் தத்துவத்தை அரசின்மையாளர்களின் பல்வேறு ஆதாரங்கள் இதனை விவரிக்கின்றன.[22][23][24][25] ஜுவாங்சி "ஒரு சிறு திருடன் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். ஒரு பெரிய மலைக் கள்ளன் ஒரு தேசத்தின் ஆட்சியாளராவார்" இவ்வாறு எழுதியுள்ளார்.[20][26][27] சினோப்பின் தியோஜெனெஸ் மற்றும் சினிசிசம், உறுதிப்பாட்டுவாதத்தை தோற்றுவித்த நிறுவனர் சிட்டியத்தின் சமகாலத்திய ஜெனோவும் இதே போன்ற தலைப்பை அறிமுகப்படுத்தினர். கிறிஸ்துவ அராஜகவாத பாரம்பரியத்தில் முதல் அராஜகவாதியாக இயேசு சில சமயங்களில் கருதப்படுகிறார்.[28] ஜார்ஜ் லெகார்டியர் இவ்வாறு எழுதினார்: "அராஜகத்தின் உண்மையான தோற்றவர் இயேசு கிறிஸ்துவே... முதல் அராஜகவாத சமுதாயத்தினர் அப்போஸ்தலர்களே." ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றில் அரசின்மை சிந்தனையின் சில வெளிப்பாடுகள் கலிபக இஸ்லாமிய உள்நாட்டுப் போரில் காணப்படுகின்றன இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இமாம் என்பது ஒரு உரிமை என்று போரினால் பாதிக்கப்பட்ட ஹரிஜித்கள் வலியுறுத்தினார்.[29]
மார்க்சிய எதிர்ப்பு
பல்வேறு இடதுசாரிகளும் அரசின்மைக் கோட்பாட்டாளர்களும் இணைந்து 1864 இல் முதலாம் தொழிலாளர் ஒன்றியத்தை அமைத்தனர்.[30] இது முதலாம் அகிலம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்சு, எங்கல்சு ஆகியோருக்கும் பக்கூனின் உள்ளிட்டோருக்கும் இடையிலான கோட்பாட்டு முரண்கள் முற்றி சில ஆண்டுகளிலேயே இடையே வேறுபாடு வளர்ந்தது. அரசைத் தகர்த்து நேரடியாக தொழிலாளர் உழவர்கள் உள்ளிட்ட வெகுமக்களின் ஆட்சியை நிறுவ அரசின்மையாளர்கள் விரும்பினர். அரசு என்பதை இல்லாதொழிப்பதே சமவுடமையைச் சாத்தியமாக்கும் என்று அவர்கள் கருதினர். ஆனால், மார்க்சியர்கள் தொழிலாளர்கள் புதிய உலகத்தின் ஆளும் வகுப்பாக இருப்பர் என்று கருதினர். ஆளும் வகுப்பாக பாட்டாளிகள் மாறி அரசைக் கைப்பற்றி சமவுடமையை உருவாக்கவேண்டும் என்று அவர்கள் விளக்கினர். அதாவது, அரசதிகாரத்தை தொழிலாளர்கள் கைப்பற்ற வேண்டும் என்று கருதினர். அரசின்மைக் கொள்கையாளர்கள் அரசு இருக்கும் வரை சமவுடமை மலராது என்பதில் உறுதியாய் நின்றனர். மேலும் அதிகாரம் புரட்சிவாதிகளையும், எல்லோரயும் மாசுபடுத்தும் என்றும், யார் அரசுக்கு வந்தாலும் அவர் சர்வதிகாரத்தை நோக்கி நகர்வார் என்றும் கூறினர். மேலும் இவ்விரு தரப்பினர்க்கும் இருந்த வேறொரு முதன்மை வேறுபாடு நடுவமை (CENTRALISM) குறித்த நிலைப்பாடு. மார்க்சியர்கள் நடுவமையை பொருளியல், அரசியல், அமைப்பியல் என அனைத்துத் தளங்களிலும் முறபோக்கானதாகவும் இன்றியமையாததாகவும் கருதினர். உற்பத்தி மேலும் மேலும் நடுவமையாதலை சமவுடமைக்கும் தேவையான ஒன்றாகக் கருதினர்[31]. மேலும் மேல்கீழ் வரிசைகொண்ட படிநிலை (hierarchy) அமைப்பு முறையையும அவர்கள் ஏற்றுகொண்டனர். அரசின்மையாளர்கள் நடுவமை , மேல்கீழ் படிநிலை அமைப்பு முறை போன்றவற்றை எந்த தளத்திலும் ஏற்கவில்லை. மாறாக, அவர்கள் பரவலாக்கத்தை (decentralization) அனைத்துத் தளத்திலும் வேண்டி நின்றனர். மேல்கீழ் படிநிலையாக்கத்துக்கு பதில் கிடைமட்டமாக சமூகம் திருத்தியமைப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினர் . இவ்வாறான பல்வேறு இன்றியமையாத வேறுபாடுகள் இவ்விரு தரப்பினர்க்கும் இடையே நிலவின. மார்க்சு மற்றும் எங்கல்சு ஆகியோர் சாதுரியமான தங்களின் செயல்பாடுகளால் அரசின்மையாளர்களை முதலாம் அகிலத்தில் தோல்வியுறச் செய்து மிகைல் பக்கூனின் உள்ளிட்டோரை . 1872 இல் விலக்கிவிட்டனர்.[32][33]
Remove ads
சிந்தனைப் பிரிவுகள்
அரசின்மை கோபாடு பல கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டது. எந்த சட்டத்தையும், கொள்கையையும் பேணாமால் எல்லா அதிகாரத்தையும் எந்த வழியாலும் அழி என்ற நிலைப்பாடு Nechayev போன்றோரின் அரசின்மை.[34][35] லியோ ரொல்சுரோய், Fernand Pelloutier போன்றோர் வன்முறை அற்ற வழிமுறைகளைக் கொண்டு ஒடுக்குமுறைகளை எதிர்க்க முயன்றனர். மக்சு இசுரேனர் போன்றோரின் அரசின்மை தனிமனிதரை முதன்மைப்படுத்தியது.[36]
மாற்றுத் தீர்வுகள்
அரசு, சமயம், மற்றும் மற்றையை அதிகார மையங்ள், பொருளாதார சட்ட முறைமைகள் மனிதர்களின் சுதந்திரத்தை ஒடுக்கும், சுரண்டும் கருவிகளாக அரசின்மை அணுகியது. அவற்றை எதிர்ப்பதுற்கு, அவை இன்றி வாழ்வதற்கு தீர்வுகளைத் தர அரசின்மை முயற்சி செய்கிறது.
எதிர்த்தல்
சிறிய குமுகங்கள்
ஒடுக்குமுறைகளை எதிர்க்க மார்க்சிய சிந்தனை அரசை தொழிலாளர்கள் கைப்பற்ற வேண்டும் என்று கூறியது. அரசை யார் வைத்திருந்தாலும், அது ஒடுக்குமுறைக் கருவியாக மாறும் என்று கருதிய அரசின்மையாளர்கள் அதற்கு மாற்றாக சிறிய குமுகங்களைப் பரிந்துரைத்தார்கள். சிறிய குமுகங்களில் அதிகார அடுக்கமைவு இல்லாமல் செய்யலாம் எனப்பட்டது.
ஒடுக்கப்பட்டோரின் அரசின்மை சிந்தனைகள்
சமூக அதிகார அடுக்கமைவால் மிகவும் பாதிக்கப்பட்ட தலித் சிந்தனையாளர்கள் பலர் அரசின்மை கருத்துக்களை கொண்டுள்ளனர்[37][38] . இவர்களின் "எதிர்க்கிறோம் ஆதலால் இருக்கிறோம்", "அடங்கமறு, அத்துமீறு" போன்ற பிடிவரிகள் இதற்கு எடுத்துக்காட்டு.[39] ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசாலும், இயக்கங்களாலும் பாதிக்கப்பட்ட சிலரும் அரசின்மை கொள்கையாளாராக உள்ளனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads