அரிகர் நாத் சாசுத்திரி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரிகர் நாத் சாசுத்திரி (Harihar Nath Shastri) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச்[1] சேர்ந்த இவர் கான்பூரின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அறியப்படுகிறார்.[2] தொழிலாளர் தலைவராகவும் இவர் தீவிரமாக பணியாற்றினார். 1920 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பொதுவுடமை வாதியாகத் திகழ்ந்தார். ஆனால் 1930 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மிதவாதியாகக் கருதப்பட்டார். 1948 ஆம் ஆண்டில் இந்திய தேசிய இரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் முதல் தலைவராக இருந்தார்.[3] 1925 ஆம் ஆண்டில் மக்கள் சேவகர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக அதன் நிறுவனர்-இயக்குநர், மறைந்த லாலா லச்சபதி ராயால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் ஓராண்டு தனிச் செயலாளராகப் பணிபுரிந்தார். 1947 ஆம் ஆண்டில் இவர் இந்திய அரசியலமைப்புச் சபையில் உறுப்பினரானார், அது கலைக்கப்பட்டவுடன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரானார்.

விரைவான உண்மைகள் அரிகர் நாத் சாசுத்திரிHarihar Nath Shastriहरि हर नाथ शास्त्री, நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads