அருந்ததி (இந்து சமயம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அருந்ததி சப்தரிஷிகளுள் ஒருவரான வசிஷ்டரின் மனைவியாவர். இவரது தந்தை பதஞ்சலியும் ஒரு மகரிஷியே. அருந்ததி வானில் தோன்றும் ஒரு நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது. வானசாஸ்திரத்தின்படி மிஜார் விண்மீன் வசிட்டராகவும், ஆல்கர் விண்மீன் அருந்ததியாகவும் கருதப்படுகிறது. இந்து திருமணங்களில் அருந்ததி பார்த்தல் என்பது ஒரு சடங்காகும்.
அருந்ததி தர்சன நியாயம்
வானவெளியில் உள்ள அருந்ததி நட்சத்திரம் சிறியது. எனவே இதனைக் காட்ட அருகிலுள்ள பெரிய நட்சத்திரங்களைக் காட்டி அதன் பின்னர் அதன் அருகிலுள்ள அருந்ததியைக் காட்டுவர். ஏதேனும் நுண்மையான கொள்கையைப் புரிய வைக்க இத்தகைய முறைகள் பயன்படுகின்றன.[1]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்பு:
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads