அறுவைச் சிகிச்சை

From Wikipedia, the free encyclopedia

அறுவைச் சிகிச்சை
Remove ads

அறுவைச் சிகிச்சை (ஒலிப்பு) என்பது, ஒரு நோயாளியின் நோயியல் நிலைமையை அல்லது காயம்பட்ட நிலைமையை ஆராய்ந்து பார்க்கவோ, அல்லது ஆராய்ந்து பார்க்கும் அதேவேளையில் நோயைக் குணப்படுத்தவோ, அல்லது உடலின் தொழிற்பாட்டையோ, தோற்றத்தையோ மேம்படுத்தும் நோக்கிலோ, அல்லது சில சமயங்களில் ஏதாவது மதம் தொடர்பான நோக்கங்களுக்காகவோ மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் அறுவை சார்ந்த செயல்முறையைக் கொண்ட மருத்துவத்தின் சிறப்பம்சமாகும்.
இம்முறை மனிதர்களிலும், ஏனைய விலங்குகளிலும் செயற்படுத்தப்படுகிறது. இவ்வாறான சிகிச்சையை செய்பவர் அறுவைச் சிகிச்சை நிபுணர் என அழைக்கப்படுவார். அறுவைச் சிகிச்சையானது சில நிமிடங்களிலிருந்து சில மணித்தியாலங்களில் செய்யப்படுமேயன்றி, தொடர்ந்துகொண்டிருக்கும் சிகிச்சை முறையல்ல.

Thumb
A cardiothoracic surgeon performs a mitral valve replacement at the Fitzsimons Army Medical Center.

பண்டைய காலத்தில் ஒருவர் முழு உணர்வுடன் இருக்கும் நிலையிலேயே இவ்வகையான அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்போது மயக்க மருந்துகள் வழங்கப்படுவதன் மூலம், நோயாளியை விழிப்புநிலை தடுமாறுதல் நிகழ்வினால் அவருக்கு வலி ஏற்படாதிருக்கச் செய்து அதன் பின்னரே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. நோயாளிக்கு பகுதியாக உணர்வற்ற நிலையை ஏற்படுத்தியோ, அல்லது முழுமையான மயக்கநிலையை ஏற்படுத்தியோ அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுவதானால் அதிக வலியிலிருந்து தப்ப முடிகின்றது. .[1][2][3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads