அலுமினியம் அசிட்டேட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அலுமினியம் அசிட்டேட்டு அல்லது அலுமினியம் எத்தனோயேட்டு (Aluminium acetate or aluminium ethanoate) என்பது அசிட்டிக் அமிலத்தினுடைய அலுமினிய உப்பாகும்[1]. இவ்வுப்பு சிலவேளைகளில் AlAc[2] என்று சுருக்க வடிவிலும் குறிக்கப்படுகிறது. ஆனால் அலுமினியம் அசிட்டேட்டின் மூலக்கூற்று வாய்ப்பாடு C6H9AlO6 ஆகும். திண்மநிலையில் இப்பெயரில் மூன்று உப்புகள் அறியப்படுகின்றன. கார அலுமினியம் ஓரசிட்டேட்டு ((HO)2AlCH3CO2), கார அலுமினியம் ஈரசிட்டேட்டு (HOAl(CH3CO2)2) மற்றும் நடுநிலை அலுமினியம் மூவசிட்டேட்டு (Al(CH3CO2)3.).[3] நீர்த்த நிலையில் அலுமினியம் மூவசிட்டேட்டு நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு மற்ற இரண்டு அசிட்டேட்டுகளையும் கொடுக்கிறது. இம்மூன்று அசிட்டேட்டுகளின் கரைசல்கள் அனைத்தையும் சேர்த்து அலுமினியம் அசிட்டேட்டு என்று பொதுவாக குறிக்கப்படுகிறது.

Remove ads

அலுமினியம் ஓரசிட்டேட்டு

அலுமினியம் ஓரசிட்டேட்டு என்பது Al(OH)2(CH3COO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியம் ஐதராக்சைடும் நீர்த்த அசிட்டிக் அமிலமும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. அடர் அசிட்டிக் அமிலம் பயன்படுத்தப்பட்டால் ஈரசிட்டேட்டும் மூவசிட்டேட்டும் உருவாகின்றன.[4]

அலுமினியம் ஈரசிட்டேட்டு

அலுமினியம் ஈரசிட்டேட்டு என்பது கார அலுமினியம் அசிட்டேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. நீரிய அலுமினியம் அசிட்டேட்டு கரைசலிலிருந்து வெள்ளை நிறத் தூளாக இது தயாரிக்கப்படுகிறது. அலுமினியம் மூவசிட்டேட்டை நீருடன் சேர்த்து நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம்.[5]

அலுமினியம் மூவசிட்டேட்டு

அலுமினியம் மூவசிட்டேட்டை அலுமினியம் குளோரைடு அல்லது அலுமினியத் தூளுடன் அசிட்டிக் அமிலம் மற்றும் அசிட்டிக் நீரிலி கலவையைச் சேர்த்து வினைப்படுத்தி தயாரிக்கலாம்.[6] இதையே சாதரணமாக அலுமினியம் அசிட்டேட்டு உப்பு என்கிறார்கள். 180 பாகை செல்சியசு என்ற உயர் வெப்பநிலையில் நீரற்ற சூழலில் இவ்வுப்பு தயாரிக்கப்படுகிறது. [5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads