அலைத்தீநுண்மம்

From Wikipedia, the free encyclopedia

அலைத்தீநுண்மம்
Remove ads

தீநுண்மங்கள் இல்லாத இடமேயில்லை என்று விவரிக்கும் அளவுக்கு இவை ஞாலத்தில் விரவிக்கிடக்கின்றன. பெருங்கடல்களின் நீர்ப்பரப்பில் காணப்படும் நுண்ணுயிர்களில் இத்தீநுண்மங்கள் குறிப்பிடத்தக்க இடத்தையும் ஏன் அவற்றை மிஞ்சும் அளவுக்கு மிகுந்து கிடக்கின்றன எனக் கூறலாம். இவ்வாறு கணக்கெடுக்கப்பட்ட தீநுண்மப் பொருட்கள் ஊட்டமில்லா/ஊட்டமற்ற நீர்நிலைகளில் (Oligotrophic water ecosystem) 104 என்கிற அளவிலும் ஊட்டநிறையுள்ள நீர்நிலைகளில் (Eutrophic water ecosystem) இவை 108 என்ற நிலையிலும் உள்ளன[1].

Thumb
படம் - சைபர் பச்சை என்னும் கறையேற்றி முறையினால் கறையேற்றப்பட்ட நீர்மாதிரியின் நுண்வரைவியாகும். இதில் பெரிதாகக் காணப்படும் பொருட்கள் பாக்டீரியாக்களாகும். இவைகளில் பெரும்பாலானவை அலைபாக்டீரியாகளாகும். இதில் துகள்கள் போல் காணப்படும் சிறிய பொருட்கள் தீநுண்மங்களாகும்.

இவ்வாறு பரவிக்கிடக்கும் தீநுண்மமானது கடல்நீரில் கரிமப் பொருட்கள் மற்றும் ஊட்டங்கள் சுழற்சிக்குப் பெரிதும் துணை நிற்கின்றன [2]. இவ்வாறு நீர்நிலைகளில் பரவியும் சுற்றுச்சூழல் சுழற்சிக்கும் பெரிதும் துணைநிற்கும் தீநுண்மங்கள் மற்ற மிதவைவாழிகளைப்போல் இவைகளும் நீரோட்டத்திற்கு உட்பட்ட இடப்பெயர்ச்சியை சந்திக்கின்றன. இவ்வாறு நீர்மேற்பரப்பில் பரந்து எளிதாக/கட்டற்று நீந்தக்கூடிய தீநுண்மச் சமூகத்தை நாம் அலைத்தீநுண்மங்கள் (அ) மிதவைத்தீநுண்மங்கள் என அழைக்கிறோம்.

Remove ads

பண்புகள்

நீரில் இருக்கும் தீநுண்மங்களின் முதல் கண்காணிப்பு தோன்றியது வலிமைமிக்க எதிர்மின்னி நுண்ணோக்கியின் கண்டுபிடிப்பிற்குப் பின்புதான் சாத்தியமாயிற்று. அறிவியல் வளர்ச்சியின் ஊக்கத்தால் கண்டறியப்பட்டதில் இவ்வுயிருருளையில் (Biosphere) 1031 மடங்கு அளவுக்குத் இத்தீநுண்மங்கள் காணப்படுகின்றன[3]. இவ்வாறு பரவிக்கிடக்கும் தீநுண்மங்களில் பெரிதும் காணப்படுவது பாவுண்ணி என அறியப்படும் நுண்ணுயிர்த்தின்னிகளே யாகும். இவை பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா இனங்களைக் காட்டிலும் 1030 மடங்கு அளவுக்கும்/ஒரு க்யூபிக் செ.மீ.க்கு 1 கோடியளவுக்கு சுற்றுச்சூழலில் மிகுந்து காணக்கிடக்கின்றன[4]. இவை பரிணாம மாற்றத்திற்கும் சுற்றுச்சூழலை நெறிப்படுத்துவதற்குப் பெரிதும் துணைநிற்கின்றன.

இத்தீநுண்மங்கள் இனங்களுக்கிடையில் மரபணுவைப் பரிமாற்றுவதால் இவை இனப்பரவலிலும் (Species diversity) மேலும் ஒரு தனியினமே உருவாகும் அளவிற்குக் காரணமாகின்றன. இவை நிலைக்கருவிலிகளுக்கிடையில் மரபணுப் பரவியிருத்தலில் மிகமுக்கிய பங்காற்றுகிறது. Competitive dominance என்று அறியப்படும் முந்துபவர்களைக் கொன்று - அஃதாவது சூழலில் முந்திக்கொண்டு வளரும் நிலைக்கருவிலி உயிர்களை அழித்தும் அதன் வளர்ச்சி மற்றும் முந்துதலில் கண்காணிப்பு செலுத்தி இவை ஒரு கட்டுப்பாட்டில் நிறுத்தி வருகின்றன [5]

Remove ads

மேற்கோள்கள்

காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads