அலோங்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அலோங் (Along) என்பது அருணாச்சலப் பிரதேசத்தில் மேற்கு சியாங் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இங்கு சியாங், யோம்கோ ஆறுகள் பாய்கின்றன. இதைச் சுற்றிலும் மலைகள் உள்ளன. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்பட்டி இங்கு 20,700 பேர் வசித்தனர்.[1]

விரைவான உண்மைகள் அலோங் ஆலோ, நாடு ...
Remove ads

தட்பவெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், அலோங், மாதம் ...
Remove ads

சுற்றுலா

  • பட்டும் பாலம்: யோம்கோ ஆற்றின் மீது பட்டும் பாலம் கட்டப்பட்டது. இது போக்குவரத்தை எளிமையாக்குவதோடு, காணக்கூடிய இடமாகவும் விளங்குகிறது. இங்கிருந்து ஊர் முழுமையும் காணமுடியும். பனிக்காலத்தில் இப்பகுதி எழில் கூடி காணப்படும்.
  • படகுப் போக்குவரத்து:

இங்கு பாயும் சியோம், யோம்கோ ஆகிய இரு ஆறுகளும் பிரம்மபுத்திரா ஆற்றுடன் கலக்கின்றன. இப்பகுதியைச் சுற்றி இமய மலை பரவியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் படகு பயணம் மேற்கொள்வர்.

  • தொங்கு பாலம்:

சியாங் ஆற்றின் மேல் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது மூங்கில்களால் ஆனது. உள்ளூர் பழங்குடியினர் தங்கள் போக்குவரத்திற்காக இதை அமைத்துள்ளனர். இங்கிருந்து மீன் பிடிப்பர்.

  • கானே வனவிலங்கு சரணாலயம்: இது 55 கி.மீ பரப்பளவு அமைந்துள்ளது. அலோங் நகரில் இருந்து பேருந்துகளில் வந்து சேரலாம். இங்கு அரிய வகை பூனைகளும், மான்களும், யானைகளும் உள்ளன. அக்டோபர் தொடங்கி ஏப்பிரல் வரையிலான காலத்திற்குள் இங்கு வந்து செல்வது சிறப்பு.
  • பழங்குடியினர் கிராமங்கள்: பக்ரா என்னும் பழங்குடியின கிராமத்தில் உள்ளூர் வாசிகளின் வீட்டமைப்பைப் பார்க்கலாம். மரத்தாலும், மூங்கிலாலும் வேயப்பட்ட இந்த வீடுகள் உள்ளூர்வாசிகளின் பண்பாட்டை முன்னிறுத்துகின்றன. பங்கிங் என்ற கிராமத்தில் உள்ளூர் வாசிகள் ஆடையுடுத்தியிருக்கும் முறை காணக்கூடியது. அதிகளவிலான ஆதிவாசிகள் இங்கு வசிக்கின்றனர். தார்க்கா என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மொப்பின் திருவிழா சிறப்பானது. இங்கு அடர்ந்த காடுகள் உள்ளன. கோலா என்ற பழங்குடியினர் இங்கு வசிக்கின்றனர்.
  • கம்கி நீராற்றல் மையம்: இது நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க நிறுவப்பட்டது, கம்கி ஆற்றின் அணையின் மூலம் மின்சாரம் தயாரிக்கிறது. இந்த ஆலையைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.
  • தொன்யி போலோ கோயில்:

உள்ளூர் ஆதிவாசிகளின் வழிபாட்டுத் தலங்களுள் இதுவும் ஒன்று. சூரிய, சந்திர வழிபாட்டிற்கென அமைக்கப்பட்டது. தொன்யி போலோ என்பது அருணாச்சலப் பிரதேசத்தில் பின்பற்றும் சமயம். இது அமைதியான அணுகுமுறையையும், இயற்கை வழிபாட்டையும், பரிவையும் வலியுறுத்துகிறது. தியான அறையும், சூரிய சந்திர கடவுளர்களின் சிலைகளும் உள்ளன. இதன்மூலம் உள்ளூர் பண்பாடு பேணிக் காக்கப்பட்டுள்ளது.

Remove ads

போக்குவரத்து

உள்ளூர் மக்கள் நடைபயணத்தை மேற்கொள்கின்றனர். சுற்றியுள்ள ஊர்களுக்குச் செல்ல ஆட்டோக்களும் உண்டு. தனியார் வாகனங்களிலோ, அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம். இந்தியாவின் ஏனைய பகுதிகளில் உள்ள பிற நகரங்களில் இருந்து வான்வழியில் பயணம் மேற்கொண்டு, ஆலோ விமான நிலையத்தை வந்தடையலாம். பின்னர், ஹெலிகாப்டர்களின் மூலம் ஆலோங் நகருக்கு வரலாம்.

இங்கு இரயில் போக்குவரத்து வசதிகள் இல்லை. அருகிலுள்ள இரயில் நிலையம் சிலபத்தரில் உள்ளது. அகல இரயில்பாதை மூலம் ஆலோவையும் சிலபத்தரையும் இணைக்கும் ஒரு புதிய பாதை முன்மொழியப்பட்டது. தொடர்புடைய கணக்கெடுப்பு ஏற்கனவே முடிக்கப்பட்டு இரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.[2] இதற்கருகில் தேசிய நெடுஞ்சாலை 52 உள்ளமையால், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் சாலைவழிப் போக்குவரத்து ஏதுவாக உள்ளது.

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads