அலோசியம்
இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அலோசியம் (Aloyseum) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு நகரத்தில் இருக்கும் புனித அலோசியசு கல்லூரியின் வளாகத்தில் அமைந்திருக்கும் ஓர் அருங்காட்சியகமாகும்.[1][2][3][4][5][6][7] 1913 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.[8]

Remove ads
வரலாறு
அலோசியம் அருங்காட்சியகம் 1913 ஆம் ஆண்டு சியாபி என்ற இத்தாலிய இயேசுட்டு பாதிரியார் சுமார் 2000 வகையான கனிமங்கள், உலர்தாவரகம் மற்றும் ஒரோமானிய நாணயங்களின் தொகுப்பை நன்கொடையாக வழங்கியபோது இந்த அருங்காட்சியகம் தொடங்கியது.[8] 1906 ஆம் ஆண்டில், மங்களூரில் பயன்படுத்தப்பட்ட முதல் தானுந்து வாகனம் தி தியான் சிற்றுந்து ஆகும். இது உயர்நில காப்பி நிறுவனத்தின் பி எஃப் எக்சு சல்டானாவால் மங்களூருக்கு இறக்குமதி செய்யப்பட்டது. அருங்காட்சியகத்தில் உள்ள நினைவுப் பொருட்களில் இந்த சிற்றுந்துவும் ஒன்றாகும்.[9] இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய தலைமுறையினர் பயன்படுத்திய வீட்டு மற்றும் விவசாயப் பாத்திரங்களின் தொகுப்பும் உள்ளது.[8]
Remove ads
கண்காட்சி காட்சியகங்கள்
அலோசியம் அருங்காட்சியகத்தில் கற்காலக் கருவிகள், அஞ்சல் முத்திரைகள், உரோமானிய நாணயங்கள், பெர்லின் சுவரின் துண்டுகள், அண்டோனியோ மோசெனியின் வரைபடங்கள், ஐரோப்பிய கலைஞர்களின் ஓவியங்கள், அபிசீனியாவின் ஈட்டிகள் மற்றும் அம்புகள், புதிய கற்காலக் கல் கோடரி, தந்தி உபகரணங்கள், மங்களூரின் முதல் சிற்றுந்து வாகனம் மற்றும் மின் உற்பத்தி இயந்திரங்கள், திமிங்கல எலும்புக்கூடு, பழைய இசைக்கருவிகள் போன்ற கலைப்பொருட்கள் உள்ளன.[9][10][8][7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads