அல்-அந்தலுஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அல்-அந்தலுஸ் ( அரபி : الأنْدَلُس, ஸ்பெயின் : al-Ándalus; போர்த்துகீசு al-Ândalus ) அந்தலூசியா அல்லது இசுலாமிய ஸ்பெயின் என்பது தற்கால ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தேசங்களை அடக்கிய நிலப்பகுதியில் இருந்த, இடைக்கால இசுலாமிய ஆட்சி நடந்த பிரதேசமாகும். கி.பி 711 முதல் 1492 வரையிலான முஸ்லிம்களின் சிறப்பான ஆட்சி இத்தீபகற்பத்தில் நிலை நின்றதை ஒட்டி இப் பிரதேசம் இசுலாமிய ஸ்பெயின், முஸ்லிம் ஐபீரியா, இசுலாமிக் ஐபீரியா போன்ற பெயர்களாலும் அறியப்பட்டது.
உமைய்யத் கலீபாக்களின் ஐபீரிய வெற்றிக்குப்பின்[1] முழுவதுமாக இசுலாமிய ஆட்சி நிறுவப்பட்டது. கலீபா அல்-வலீது-1 (711-750), கொர்தொபா அமீரகம் (750 – 929) என்ற பெயரிலும் , பின்பு 929 முதல் 1031 வரை கலீபாக்களின் ஆட்சியும் நடபெற்றது. இசுலாமிய, கிறித்தவ சமூகங்க்களுக்கு இடையே கலாச்சாரப் பரிமாற்றமும், சமூக ஒத்துழைப்பும் உயர்ந்தன. கிறித்தவ மற்றும் யூதர்களுக்கு ஜிசியா எனும் சிறப்பு வரி விதிக்கப்பட்டது. அவ்வரியானது, அவர்களின் சமய உரிமைகளை சுதந்திரமாக அனுபவிப்பதற்கும், முழுமையான பாதுகாப்பிற்கும் வழி வகுத்தது.
கொர்தொபாவில், இசுலாமிய ஆட்சியின் கீழ் அறிவியலும் கலையும் புதிய உச்சங்களைத் தொட்டன[2]. திரிகோணமிதி (ஜாபிர்), வானவியல் (இப்ரஹீம் அல ஸர்காலி), மருத்துவம், விவசாயப் புரட்சி, உட்பட பல துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளும் அறிவியல் முன்னேற்றங்களும் அல்-ஆண்டலசிலிருந்து வெளியாயின. ஐரோப்பா, மத்திய தரைக்கடல் நாடுகள், மற்ற இசுலாமிய ஆட்சிப் பிரதேசங்க்களுக்கு மிக்ச்சிறந்த கல்வி மையமாக அல்-ஆண்டலஸ் விளங்கிற்று. சுமார் எண்ணூறு ஆண்டு காலங்கள் ஸ்பெயினில் இசுலாமிய ஆட்சி நிலை பெற்றது.
உமய்யாத் கலீபக்களின் வீழ்ச்சிக்குபின், அல்-ஆண்டலஸ் பல சிறு சிறு நிலப்பகுதிகளாகச் சிதறுண்டது. கிறித்தவ அரசன் அல்பொன்சொ V1 தலைமையில் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகியது. தக்குதலுக்கு உள்ளான அல்-அண்டலசுக்கு மொரவித் மன்னர்களின் உதவியை நாட வேண்டி வந்தது. மொராவித் ஆட்சியாளர்கள் கிறிஸ்தவ தாக்குதல்களை முறியடித்து பலகீனமான அல்-அண்டலஸைத் தமது பெர்பெரிய ஆட்சிக்குகீழ் கொண்டுவந்தனர். அடுத்த ஒன்றரை நூற்றாண்டுகளில் அல்-அண்டாலஸ் மொராவித் ஆட்சிக்குட்பட்ட ஒரு மிகச் சிறிய பிரதேசமாக மறிற்று.
இறுதியில், ஐபீரிய தீபகற்பத்தின் வடக்கில் உள்ள கிறித்தவ ராஜ்யங்கள் முஸ்லீம் நாடுகளை தெற்கே விரட்டிவிட்டன. 1085 ல் அல்பொன்சொ V1 டோலிடோ ( Toledo ) நகரைக் கைப்பற்றியதோடு இசுலாமிய அரசின் வீழ்ச்சி தொடங்க்கிற்று. 1236 ல் கொர்தொபா வீழ்ந்த்தைத் தொடர்ந்து, இரண்டு வருடங்களுக்குள் கிரனடா இசுலாமியர்களின் கடைசி மாநிலமாகத் தனித்தது. கடைசியாக ஜனுவரி 2, 1492ல் கிரனடாவின் அமீர் முஹம்மத் XII அரசி இசபெல்லாவிடம் சரணடைந்ததோடு எண்ணூறு ஆண்டுகால இசுலாமிய ஆட்சி ஸ்பெயினில் முடிவுக்கு வந்தது. அல்-ஆண்டலஸ் மீண்டும் கிறிஸ்தவர்கள் வசமானது. இசுலாமிய ஆட்சி ஸ்பெயினிலிருந்து விலகினாலும் ஸ்பெயினி கலாச்சாரம், கலை, மொழி ஆகியனவற்றில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads