அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு (Avaniyapuram Jallikatt) என்பது தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஆகும். தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். தை முதல் நாளாம் பொங்கல் திருநாள் அன்று நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்குத் தென் மாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்படுகிறன.
Remove ads
வரலாறு
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்து வெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நடந்ததற்கான சான்றுகள் உள்ளன. 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கபட்டுள்ளன. சிந்து வெளி நாகரிகம் சார்ந்த முத்தரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவல் 2000ம் ஆண்டு பழமையானது ஆகும். 2014 ம் ஆண்டு நடந்த விளையாட்டில் மாடுபிடி வீரர்கள் 19 பேரும், பார்வையாளர்கள் 15 பேரும் காயமடைந்தனர். 14.01.2014 அன்று மட்டும் 338 காளைகள் கலந்துகொண்டன.[1][2]
Remove ads
2023
2023 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் காலை 7 மணி முதல் மாலை 5 வரை போட்டி நடைபெற்றது. தொடக்க விழாவில் அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.[3] போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த ஜெய்ஹிந்த்புரம் விஜய் என்பவர் 28 காளைகளையும், இரண்டாமிடம் பிடித்த கார்த்தி என்பவர் 17 காளைகளையும், மூன்றாமிடம் பிடித்த விளாங்குடி பாலாஜி என்பவர் 14 காளைகளையும் பிடித்தனர்.[4] இதில் மொத்தம் 11 சுற்றுகளில் சுமார் 250 வீரர்களும் 737 காளைகளும் கலந்துகொண்டனர்.[5]
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads