அஹ்மத் சிர்ஹிந்தி

From Wikipedia, the free encyclopedia

அஹ்மத் சிர்ஹிந்தி
Remove ads

இமாம் ரப்பானி செய்க் அஹ்மத் அல்-பாரூக்கி அல்-சிர்ஹிந்தி (1564[1]-1624) அவர்கள் இந்தியாவின் ஒரு இசுலாமிய அறிஞர்,ஹனபி நீதிபதி, இறையியலாளர்,இந்திய மெய்யியலாளர்,நக்ஷபந்தி சூபிப் பிரவின் முக்கிய உறுப்பினர்.இவர் முஜத்தித் அலிப் ஸானி, கருத்து: " இரண்டாமாயிரம் வருடத்தை உயர்பெறச் செய்தவர்".அவர் இஸ்லாத்தை புத்துயிர் பெறச்செய்ததற்கும், முகலாயப் பேரரசர் அக்பரின் காலத்தின் தோண்றிய இஸ்லாத்துக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்தற்கும்[2] முஜத்தித் அலிப் ஸானி என்று அழைக்கப்படுகின்றார்.

விரைவான உண்மைகள் இமாம் ரப்பானி அஹ்மத் சிர்ஹிந்தி, பிறப்பு ...

நக்ஷபந்தி சூபி வலையமைப்பின் முஜத்திதி,காலிதி,சைபி,தாஹிரி,காசிமியா மற்றும் ஹக்கானி போன்ற பல உப பிரிவுகளின் ஆன்மிகத் தொடர்பு அஹ்மத் சிர்ஹிந்தி ஊடாகவே செல்கின்றது.சிர்ஹிந்தியின் கல்லறை ரவ்தா ஷரீப் என அழைக்கப்படுகின்றது, இது இந்தியாவின் சிர்ஹிந்தில் அமைந்துள்ளது.

Remove ads

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

செய்க் அஹ்மத் சிர்ஹிந்தி 1564 மே 26இல் இந்தியாவின் சிர்ஹிந் நகரில் பிறந்தார்.[1] அவர்கள் இசுலாமிய கிலாபத்தின் இரண்டாவது கலீபா உமர்(றழி) அவர்களின் வழித்தோண்றலில் வந்தவர்.அவர் தனது ஆரம்பக் கல்வியை அவரது தந்தை,செய்க் அப்த் அல்-அஹத், அவரது சகோதரர்களான செய்க் முஹம்மத் ஸாதிக் மற்றும் செய்க் முஹம்மத் தாஹிர் அல்-லாஹுரி ஆகியோரிடம் பெற்றார்.[3] அஹ்மத் சிர்ஹிந்தி சிறுவயதிலேயே புனித அல்குரஆனை மனனம் செய்தார். பின்னர், அவர் நவீன பாகிஸ்தானில் அமைந்துள்ள சியல்கோட்டில கல்விகற்றார்.[1] காஷ்மீரில் பிறந்த அறிஞர் மௌலானா கமாலுத்தீனின் கீழ் சியல்கோட் அறிவுமையமாக மாறியிருந்தது.[4] அங்கு அவர் தர்க்கவியல்,தத்துவம்,இறையியல் என்பவற்றை கற்றார்.மேம்பட்ட தப்ஸீர் மற்றும் ஹதீஸ் குறிப்பேடுகளை காஷ்மீரைச் சேர்ந்த யாக்கூப் ஷாபியின்(1521-1595) கீழே வாசித்தார்.[5] காஸி பஹ்லோல் பதகஸானி, அஹ்மத் சிர்ஹிந்திக்கு சட்டடவியல், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை மற்றும் வரலாறு என்பவற்றை போதித்தார்.[6][7]

அஹ்மத் சிர்ஹிந்தி சுவரவர்த்தி,காதிரி மற்றும் சிஸ்தி சூபி வலையமைப்புக்களில் விரைவான முன்னேற்றமடைந்தார். அவரது 17வயதில் அச்சூபி வலையமைப்புகளின் சீடர்களை வழிநடத்துவதற்கு அவருக்கு அனுமதிவழங்கப்பட்டது.இறுதியில் அவர் நக்ஷபந்தி சூபி வலையமைப்பில், சூபி செய்க் முஹம்மத் பாக்கி ஊடாக இணைந்துகொண்டதுன்,நக்ஷபந்தி சூபி வலையமைப்பில் ஒரு முன்னணி சூபி தலைவராக மாறினார்.சூபி வலையமைப்பு மக்களை சென்றடையச் செய்வதற்காக, அவரது பிரதிநிதிகள் முகலாயப் பேரரசின் பல பகுதிகளுக்கு சென்றனர்.இறுதியில் சில சாதகங்களை முகலாய நீதிமன்றங்களிலிருந்து பெற்றுக்கொண்டனர்.[8]

Remove ads

பிந்திய வாழ்க்கை

அஹ்மத் சிர்ஹிந்தி வாழந்த காலத்தில் முகலாயப் பேரரசர் அக்பர் ஆட்சியில் இருந்தார்.முகலாயப் பேரரசுடன் நக்ஷபந்தி சூபிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.இதனால் அக்பர் "தீன் ஏ இலாஹி" என்ற இஸ்லாத்துக்கு எதிரான கொள்கையை அறிமுகப்படுத்தியபோது, அஹ்மத் சிர்ஹிந்தி அதனை கடுமையாக எதிர்த்தார்.[9] அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகேளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார்.அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து உண்மையான சமயநெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார்.அக்பரின் "தீன் ஏ இலாஹி" கொள்கையை, அவரது மகன் ஜஹாங்கீர் பரிந்து பேசவில்லை.அக்பரின் மரணத்துக்கு பின்னர் அவரது காெள்கையும் மறைந்தது.அக்பரின் மறைவுக்கு பின்னர், ஜஹாங்கீர் ஆட்சிபிடமேறினார்.ஜஹாங்கிருக்கு சிரம்பணியவில்லை என்பதற்காக அஹ்மத் சிர்ஹிந்தி குவாலியர் கோட்டையில் சிறையிலிட்டப்பட்டார்.[10] எனினும், பின்னர் அஹ்மத் சிர்ஹிந்தியின் மார்க்க விளக்கத்தின் பயனாக ஜஹாங்கீர் அவரது மாணவராக மாறியதுடன்,அவரது புதல்வர் குர்ரத்தையும்(ஷாஜகான்) மார்க்க கல்வி கற்பதற்காக ஷேக் அஹ்மத் அவர்களிடம் ஒப்படைத்தார்.[11] ஜாஹாங்கிர் அழைப்பை ஏற்று ஆக்ராவுக்கு அஹ்மத் சிர்ஹிந்தி சென்றார்.முகலாயப் பேரரசின் அமைச்ர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட கெளரவத்தை அஹ்மத் சிர்ஹிந்திக்கு ஜஹாங்கிர் வழங்கினார்.இஸ்லாமியக் கொள்கைகளை மக்களுக்கு சரியான முறையில் போதிக்க வேண்டும் என்ற அஹ்மத் சிர்ஹிந்தியின் நோக்கத்தை நிறைவேற்றிச் செல்வதற்கு, இது வாய்ப்பளித்தது.[12] அவர் ஆக்ராவில் மூன்றரை வருடங்கள் தங்கியிருந்து,இஸ்லாமியப் போதனைகளில் ஈடுபட்டார்.பின்னர்,மன்னரின் அனுமதியுடன் அஜ்மீருக்கு சென்று, அங்கிருந்து அவரது ஊரான சிர்ஹிந்துக்குச் சென்றார்.தனது இறுதிக்காலம் முழுவைதயும் சிர்ஹிந்தில் கழித்தார்.[13]

Remove ads

மரணம்

அஹ்மத் சிர்ஹிந்தியின் இறுதி காலாத்தில், அவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.நாளுக்கு நாள் அவரது உடல்நிைல மிகவும் பாதிக்கப்பட்டு வந்தது. 1624 டிசம்பர் 10ஆம் திகதி, தனது 63ஆம் வயதில் அவர் மரணமடைந்தார். அவர் இந்தியாவின் கிழக்கு பன்ஜாபின் சிர்ஹிந்தில் அடக்கம் செய்யப்பட்டார்.[14]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads