அ. மா. பரமசிவம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அ. மா. பரமசிவம் (A. M. Paramasivan)(4 ஆகத்து 1945-23 மார்ச்சு 2015) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக முன்னாள் அமைச்சரும் ஆவார், இவர் 1977ஆம் ஆண்டு முதல் மேலூர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1991 முதல் 1996 வரை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[1] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். மதுரை மாவட்டம் நெல்லியேந்தலைச் சார்ந்த பரமசிவம், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். விவசாயம் இவரது தொழிலாகும்.[2]
Remove ads
இறப்பு
மதுரை அண்ணாநகரில் வாழ்ந்துவந்த இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கபட்டு இருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2015 மார்ச் 23 அன்று இறந்தார்.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads