ஆக்கிரமிப்பு உயிரினம்

தொடர்பில்லாத இடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினமானது அதிகமாக பெருகி அந்த புதிய சூழலுக்கு From Wikipedia, the free encyclopedia

ஆக்கிரமிப்பு உயிரினம்
Remove ads

ஆக்கிரமிப்பு உயிரினம் அல்லது அயல் உயிரினம் (invasive or alien species) என்பது அறிமுகப்படுத்தப்பட்ட இனமாகும். இந்த அறிமுகப்படுத்தபட்ட இனத்தின் எண்ணிக்கை மிகுந்து அந்த புதிய சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது ஆகும். ஆக்கிரமிப்பு இனங்கள் புதிய வாழ்விடங்களையும், உயிரின மண்டலத்தையும் மோசமாக பாதிக்கின்றன. இதனால் சூழல் அல்லது பொருளாதார சேதம் உண்டாகிறது. உணவுச்சங்கிலியில் மனிதர்கள் செய்த மாற்றங்களினால், பூர்வீகச் சூழலுக்குத் தீங்கு ஏற்படும் பூர்வீக உயிரினங்களுக்கும் இந்தச் சொல் சிலசமயங்களில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஊதா கடல் முள்ளெலி ( Strongylocentrotus purpuratus ) அதன் இயற்கை வேட்டையாடியான கலிபோர்னியா கடற்கீரி அதிக அளவில் பிடிக்கப்பட்டதன் காரணமாக வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் கடற்பாசி காடுகள் அழிந்துவிட்டன. [1] 20 ஆம் நூற்றாண்டிலிருந்து, ஆக்கிரமிப்பு இனங்கள் கடுமையான பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

Thumb
பார்த்தீனியம்
Thumb
ஆகாயத் தாமரை
Thumb
உண்ணிச்செடி

நீண்டகாலமாக நிலைத்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் மீது உயிரினங்கள் படையெடுப்பது என்பது ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆனால் மனிதரால் அறிமுகப்படுத்தபட்ட இனங்களின் படையெடுப்பின் வீதம், அளவு, புவியியல் எல்லை போன்றவை பெரிதும் அதிகரித்துள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனிதர்கள் தற்செயலாகவோ மற்றும் வேண்டுமென்றே உயிரினங்களை பரவவிடுபவர்களாக இருந்துள்ளனர். அவர்களின் தொடக்ககால இடம்பெயர்வுகளில் தொடங்கி, அப்போக்கு கண்டுபிடிப்புக் காலத்தில் முடுக்கம் பெற்று, பன்னாட்டு வணிகத்த்தினால் மீண்டும் முடுக்கம் பெற்றன.[2] ஆக்கிரமிப்பு தாவர இனங்களில் சீமைக் கருவேலம், ஆகாயத் தாமரை, உண்ணிச்செடி, பார்த்தீனியம் போன்றவை குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாக உள்ளன. ஆக்கிரமிப்பு விலங்குகளுக்கு எடுத்துக்காட்டுகளாக ஆப்பிரிக்கன் கெளுத்தி, டேங் கிளானர், வீழ்ச்சி படைப்புழு ஆகியவை உள்ளன. [3] [4][5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads