ஆங்கில இலக்கியம்

From Wikipedia, the free encyclopedia

ஆங்கில இலக்கியம்
Remove ads

ஆங்கில இலக்கியம் (English literature) என்பது ஆங்கில மொழியில் இயற்றப்படும் இலக்கியப் படைப்புகளைக் குறிக்கும். இதனை இயற்றியவர்கள் இங்கிலாந்து நாட்டவர்களாக இருக்க வேண்டுவதில்லை; ஜோசப் கொன்ராட் போலந்துக்காரர்,இராபர்ட் பர்ன்சு இசுகாட்லாந்துக்காரர், ஜேம்சு ஜோய்சு அயர்லாந்து நாட்டவர், டைலன் தாமசு வேல்சு பகுதியைச் சேர்ந்தவர், எட்கார் ஆலன் போ அமெரிக்கர், வி. சூ. நைப்பால் இந்திய வம்சாவளி மேற்கிந்தியர் மற்றும் விளாடிமிர் நபோகோவ் உருசியர்.இன்னும் சொல்வதென்றால் உலகின் பல பாகங்களில் பேசி,எழுதப்படும் ஆங்கிலத்தின் அனைத்து வடிவங்களிலும் பரந்த இலக்கியம். ஆங்கிலத்தில் எழுதப்பட்டாலும், பிரிட்டன் தவிர வேற்று நாட்டவர்களால் எழுதப்படும் இலக்கிய புத்தகங்கள் அந்தந்த நாட்டு பெயரை முன்வைத்தே அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக, இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஆங்கிலத்தில் எழுதும் இலக்கிய படைப்புகள் 'ஆங்கிலத்தில் இந்திய படைப்புகள்' என்றே அழைக்கப்படுகின்றன. கல்வித்துறையில் இந்தச் சொல் பொதுவாக ஆங்கிலம் கற்பிக்கும் துறைகளைக் குறிக்கிறது. ஆங்கில இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளராக வில்லியம் சேக்சுபியர் கருதப்படுகிறார்.

Thumb
வில்லியம் சேக்சுபியர்
Remove ads

வரலாறு

பழைய ஆங்கில இலக்கியம்

கி. பி 450 முதல் 1066 வரை உள்ள காலத்தை பழைய ஆங்கில இலக்கிய குறிப்பிடுகின்றனர். இந்தக் காலகட்டத்தின் முக்கியமான படைப்பாக கருதப்படுவது பெயர் தெரியா படைப்பாளியின் பியோல்ப் எனப்படும் இதிகாசம் ஆகும். இது சமகாலத்தில் இங்கிலாந்தின் தேசிய இதிகாசமான போற்றப்பட்டது.

வெளியிணைப்புகள்

புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

ஜெஃப்ரி சாஸர்

எட்மண்ட் ஸ்பென்ஸர்

வில்லியம் ஷேக்ஸ்பியர்

ஜான் மில்டன்

ஜான் டிரைடன்

சாமுவேல் ஜான்சன்

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்

லார்டு டென்னிஸன்

தாமஸ் ஹார்டி

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads