ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப் பலகை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ் எழுத்துக்களைத் தட்டெழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் விசைப்பலகை முறைகளுள் அல்லது விசைப்பலகைத் தளக்கோலங்களுள் ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப்பலகையும் ஒன்று. ஆங்கில விசைப்பலகை ஒன்றினைப் பயன்படுத்தி, தமிழ் எழுத்துக்களை, அவற்றுக்குச் சமமான ஒலியைத்தரக்கூடிய ஆங்கில எழுத்துகக்ளைத் தட்டுவதன் மூலம் உள்ளிடுகின்ற முறையே இதுவாகும்.

தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் இருப்பதாலும் பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்திலேயே அலுவலகங்களில் ஆவணங்களை பரிமாறிக் கொள்வதாலும் தமிழ் விசைப் பலகையை கற்றுக் கொள்ள எடுக்கும் நேரத்தாலும் ஆங்கில ஒலியியல் முறை விசைப் பலகை, கடல் கடந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் மிகப் பிரபலம் அடைந்துள்ளது.

Remove ads

வடிவமைப்பு

ஆங்கில ஒலியியல் முறை விசைப்பலகை என்று அறியப்படும் விசைப்பலகைத் தளக்கோலங்கள் பல உள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் தந்தி அனுப்புதல் போன்ற தேவைகளுக்காக முன்னர் உருவாக்கப்பட்ட ,ரோமன் எழுத்துக்கள் மூலம் தமிழை உள்ளிடுவதற்காகத் தரப்படுத்தப்பட்ட Romanished நியமத்தினை ஒட்டியே அமைந்துள்ளன. ஆனாலும் ஒவ்வொரு தளக்கோலமும் அந்நியமத்திலிருந்து சிற்சில இடங்களில் வேறுபடுகின்றது.

பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப்பலகை முறைகளில் காணப்படும் பொதுவான தளக்கோலம் கீழே தரப்பட்டுள்ளவாறு அமைகிறது.

உயிர் எழுத்துக்கள்


மேலதிகத் தகவல்கள் தமிழ் எழுத்து, விசைப்பலகையில் தட்டவேண்டிய ஆங்கில எழுத்து/எழுத்துக்கள் ...

மெய் எழுத்துக்கள்

வல்லினம்

  • க் k
  • ச் s
  • ட் d or t
  • த் th
  • ப் b or p
  • ற் R

இடையினம்

  • ய் y
  • ர் r
  • ல் l
  • வ் v
  • ழ் z
  • ள் L

மெல்லினம்

  • ங் ng
  • ஞ் nj
  • ண் N
  • ந் w
  • ம் m
  • ன் n

கிரந்த எழுத்துக்கள்

  • ஹ் h
  • ஸ் S
  • ஜ் j
  • ஷ் sh
  • ஸ்ரீ Sr

மேற்கூறியவாறு ஸ்ரீ உருவாகவில்லையெனில். கீழ்க்கண்டவாறு தட்டச்சு செய்யலாம்

  • ஸ்ரீ SrI (அ) Srii

உயிர் மெய்

  • க்+அ = க
  • k+a = க
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads