ஆசான்சோல்

From Wikipedia, the free encyclopedia

ஆசான்சோல்
Remove ads

ஆசன்சோல் (Asansol , Bengali: আসানসোল) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் மலிந்த சுறுசுறுப்பான வணிக பெருநகர் பகுதியாகும். மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக விளங்குகிறது. [2] இந்நகரம் மாநகராட்சி மன்றத்துடன் கூடியது.

விரைவான உண்மைகள் Asansolআসানসোলआसनसोल சுரங்கங்களின் நகரம், நாடு ...

மாநிலத்தின் மேற்கு எல்லையில் மேற்கு வர்த்தமான் மாவட்டத் தலைமையிடம் ஆகும். மிகுந்த தொழிலாளர்கள், உயர்ந்த தனிநபர் வருமானம், நல்ல கல்வி நிறுவனங்கள், போக்குவரது வசதிகள் என வளர்ச்சிக்கு வழிகோலும் காரணிகளைக் கொண்டுள்ளது. இதன் பின்புலத்தில் பாங்குரா மற்றும் புரூலியா மாவட்டங்களும் வடக்கு வங்காளமும் உள்ளன. ஒரிசா மற்றும் சார்க்கண்ட் மாநிலங்களுடனும் அணுக்கமான தொடர்பு கொண்டுள்ளது. ஓர் பிரித்தானிய ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் 100 விரைவாக வளர்ந்துவரும் நகரங்களில் இடம் பெற்றுள்ள 11 இந்திய நகரங்களில் ஒன்றாக ஆசன்சோல் திகழ்கிறது. .[3]

ஆசன்சோல் என்ற பெயர் இரு பெயர்களின் கூட்டாகும்; ஆசன் என்பது தாமோதர் ஆற்றங்கரைகளில் காணப்படும் ஒருவகை மரத்தையும் சோல் என்பது மண் எனவும் குறிக்கும். இணையாக கனிமங்கள் நிறைந்த பூமி எனப் பொருள் கொள்ளலாம்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads