ஆசியக் கிண்ணம் 2023

From Wikipedia, the free encyclopedia

ஆசியக் கிண்ணம் 2023
Remove ads

2023 ஆசியக் கிண்ணம் (2023 Asia Cup) அல்லது சூப்பர் 11 ஆசியக் கோப்பை (Super 11 Asia Cup)[1] என்பது ஆசியக் கிண்ணத்தின் 16-ஆவது பதிப்பாகும். இந்தப் போட்டிகள் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளாக விளையாடப்பட்டன. இந்தத் தொடரை பாக்கித்தான் அதிகாரபூர்வமாக நடத்தியது.[2] 6 நாட்டு அணிகள் மோதிய இத்தொடர்,[3] 2023 ஆகத்து 30 முதல் செப்டம்பர் 17 வரை பாக்கித்தானிலும், இலங்கையிலும் நடைபெற்றன.[4] நடப்பு வாகையாளராக இலங்கை விளையாடியது.[5] ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் முதல் ஆசியக் கோப்பை இதுவாகும். இதில் நான்கு போட்டிகள் பாக்கித்தானிலும், மீதமுள்ள ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடைபெற்றன.[6][7][8]

விரைவான உண்மைகள் நாட்கள், நிர்வாகி(கள்) ...

ஆசியத் துடுப்பாட்ட அவையின் ஐந்து முழு உறுப்பினர்களான ஆப்கானித்தான், வங்காளதேசம், இந்தியா, பாக்கித்தான், இலங்கை அணிகள் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றன. 2023 ஆசியத் துடுப்பாட்ட அவை ஆண்கள் பிரீமியர் கோப்பையை வென்றதன் மூலம் தகுதி பெற்ற நேபாளமும் இவர்களுடன் இணைந்தது. இந்திய அரசாங்கத்தின் மறுப்பு காரணமாக பாக்கித்தானுக்குப் பயணம் செய்ய மறுத்த இந்தியாவைத் தவிர, அனைத்து அணிகளும் பாக்கித்தானில் குறைந்தபட்சம் ஒரு சில ஆட்டங்களில் விளையாடின.[9][10][11] 2023 சனவரியில், ஆசியத் துடுப்பாட்ட அவை 2023 மற்றும் 2024க்கான போட்டிகளுக்கான் திகதிகளையும் வடிவமைப்பையும் அறிவித்தது.[12][13][14] முதலில், போட்டி 2021 இல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட் 19 பெருந்தொற்றுக் காரணமாக 2023 க்கு ஒத்திவைக்கப்பட்டது. போட்டிக்கான அட்டவணை 2023 சூலை 19 அன்று அறிவிக்கப்பட்டது.[15] இறுதிப் போட்டியில் இலங்கையை 10 இலக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தனது எட்டாவது ஆசியக் கோப்பையை வென்றது.

Remove ads

வடிவம்

போட்டியின் குழுக்கள் மற்றும் வடிவம் 9 ஜனவரி 2023 அன்று அறிவிக்கப்பட்டது. ஆறு அணிகள் மூன்று வீதம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன.[16] ஆறு முதல் சுற்றுப் போட்டிகள், ஆறு சூப்பர் 4 போட்டிகள் மற்றும் ஒரு இறுதிப் போட்டி என மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.[17] இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் குழு அ வில் இடம் பெற்றன. அதே சமயம் நடப்பு வாகையாளரான இலங்கை வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் குழு ஆ வில் இடம்பெற்றது [18] ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 4 க்கு முன்னேறின. அங்கிருந்து முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.[19]

Remove ads

நிகழிடங்கள்

மேலதிகத் தகவல்கள் பாகித்தான், இலங்கை ...

அணிகளும் தகுதியும்

Thumb
  ஆசிய கோப்பைக்கு முழு உறுப்பினர்களாக தகுதி பெற்றனர்
  2023 ஏசிசி ஆண்கள் பிரீமிய கோப்பை மூலம் தகுதி பெற்றது
  தகுதி பெறவில்லை

ஆசியத் துடுப்பாட்ட அவையின் முழு உறுப்புரிமை கொண்ட அணிகள் இச்சுற்றில் விளையாட நேரடியாகத் தகுதி பெற்றன. நேபாள அணி 2023 ஏசிசி ஆண்கள் பிரீமியர் கோப்பை இறுதிப் போட்டியில் அமீரக அணியை வென்றதை அடுத்து இச்சுற்றில் முதல் தடவையாக விளையாடத் தகுதி பெற்றது.[22]

மேலதிகத் தகவல்கள் தகுதிக்கான வழிமுறைகள், நாள் ...

குழுக்கள்

மேலதிகத் தகவல்கள் ஆப்கானித்தான், வங்காளதேசம் ...
Remove ads

குழு நிலை

குழு அ

புள்ளிப் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் நிலை, அணி ...
மூலம்: ESPNcricinfo
(H) நடத்தும் நாடு

     சூப்பர் 4 இற்குத் தெரிவு

போட்டிகள்

30 ஆகத்து 2023
14:30 (பா.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
 நேபாளம்
104 (23.4 நிறைவுகள்)
பாபர் அசாம் 151 (131)
சோம்பால் காமி 2/85 (10 நிறைவுகள்)
சோம்பால் காமி 28 (46)
சதாப் கான் 4/27 (6.4 நிறைவுகள்)
பாக்கித்தான் 238 ஓட்டங்களால் வெற்றி
மூல்தான் துடுப்பாட்ட அரங்கு, முல்தான்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நிசீ), மசூதுர் ரக்மான் (வங்)
ஆட்ட நாயகன்: பாபர் அசாம் (பாக்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • முதல் தடவையாக பாக்கித்தானும் நேபாளமும் பன்னாட்டு ஒரு-நாள் போட்டி ஒன்றில் மோதின.
  • இப்திகார் அகமது (பாக்) தனது பன்னாட்டு ஒருநாள் சதத்தைப் பெற்றார்.[29]
  • பாபர் அசாம், இப்திகார் அகமது ஆகியோர் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் பாக்கித்தானுக்காக ஐந்தாவது இலக்குக்கான அதிகபட்ச இணைப்பாட்டமாக 214 ஓட்டங்களைப் பெற்றனர்.

2 செப்டம்பர் 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
266 (48.5 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
  • அவ்வாட்ட முடிவை அடுத்து, பாக்கித்தான் சூப்பர் 4 இல் விளையாடத் தகுதி பெற்றது.

4 September 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
நேபாளம் 
230 (48.2 நிறைவுகள்)
 இந்தியா
147/0 (20.1 நிறைவுகள்)
ஆசிப் சேக் 58 (97)
ரவீந்திர ஜடேஜா 3/40 (10 நிறைவுகள்)
இந்தியா 10 இலக்குகளால் வெற்றி (ட.லூ முறை)
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: பவுல் வில்சன் (ஆசி), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக இந்தியாவின் வெற்றி இலக்கு 23 நிறைவுகளுக்கு 145 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • முதல் தடவையாக இந்தியாவும் நேபாளமும் பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடின.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து, இந்தியா சூபர் 4 இல் விளையாடத் தகுதி பெற்றது, நேபாளம் விலக்கப்பட்டது.

குழு ஆ

புள்ளிப் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் நிலை, அணி ...
மூலம்: ESPNcricinfo
(H) நடத்தும் நாடு

     சூப்பர் 4 இற்குத் தெரிவு

போட்டிகள்

31 ஆகத்து 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
164 (42.4 நிறைவுகள்)
 இலங்கை
165/5 (39 நிறைவுகள்)
  • வங்காளதேசம் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
  • தன்சித் அசன் (வங்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

3 செப்டம்பர் 2023
14:30 (பா.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
334/5 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
245 (44.3 நிறைவுகள்)
வங்காளதேசம் 89 ஓட்டங்களால் வெற்றி
கடாபி அரங்கம், லாகூர்
நடுவர்கள்: ஆசிஃப் யாகூப் (பாக்), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: மெஹதி ஹசன் (வங்)
  • வங்காளதேசம் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
  • சமீம் ஒசைன் (வங்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
  • ஆப்கானித்தான் பாக்கித்தானில் விளையாடிய முதலாவது பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி இதுவாகும்.
  • மெஹதி ஹசன் (வங்) தனது 1000-ஆவது ஓட்டத்தை பன்னாட்டு ஒருநாள் போட்டியில் எடுத்தார்.
  • வங்காளதேசம்-ஆப்கானித்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இரு அணிகளும் இணைந்து பெற்ற அதிகபட்ச ஓட்டமாக 579 ஓட்டங்கள் இந்தப்போட்டியில் பெறப்பட்டது.[30]
  • இவ்வாட்ட முடிவை அடுத்து, வங்காளதேசம் சூப்பர் 4 இல் விளையாடத் தகுதி பெற்றது.

5 செப்டம்பர் 2023
14:30 (பா.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
291/8 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
289 (37.4 நிறைவுகள்)
முகம்மது நபி 65 (32)
கசுன் ராஜித 4/79 (10 நிரைவுகள்)
இலங்கை 2 ஓட்டங்களால் வெற்றி.
கடாபி அரங்கம், லாகூர்
நடுவர்கள்: ஆசிஃப் யாகூப் (பாக்), கிறிஸ் கஃப்பனி (நியூ)
ஆட்ட நாயகன்: குசல் மெண்டிசு (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • முகம்மது நபி (ஆப்) தனது நாட்டிற்காக மிக விரைவான பன்னாட்டு ஒருநாள் 50களை (24 பந்துகள்) எடுத்தார்.[31]
  • இவ்வாட்ட முடிவை அடுத்து, இலங்கை சூப்பர் 4 இல் விளையாடத் தகுதி பெற்றது, ஆப்கானித்தான் வெளியேற்றப்பட்டது.
Remove ads

சூப்பர் 4

பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் 11 செப்டம்பர் 2023 அன்று இந்தியா-பாக்கித்தான் இடையேயான சூப்பர் நான்கு மோதலுக்கு ஒதுக்கப்பட்ட நாளாக அறிவித்தது.[32] ஒதுக்கப்பட்ட நாள் தூண்டப்பட்டால், போட்டி இடைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து செப்டம்பர் 11 அன்று தொடரும்.[33]

செப்டம்பர் 12 அன்று இலங்கையை 41 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்தியா பத்தாவது முறையாக ஆசியக்கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.[34] இரண்டு நாட்களுக்குப் பிறகு, மழையால் தாமதிக்கப்பட்ட போட்டியில் பாக்கித்தானை இரண்டு இலக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை, 11-ஆவது தடவையாக இறுதிப் போட்டியை அடைந்தது.[35]

புள்ளிப் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் நிலை, அணி ...
மூலம்: ESPNcricinfo

     இறுதிப் போட்டிக்குத் தெரிவு.

போட்டிகள்

6 செப்டம்பர் 2023
14:30 (பா.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
193 (38.4 நிறைவுகள்)
 பாக்கித்தான்
194/3 (39.3 நிறைவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 64 (87)
அரிசு ரவூஃப் 4/19 (6 நிறைவுகள்)
இமாம்-உல்-ஹக் 78 (84)
சொரிபுல் இசுலாம் 1/24 (8 நிறைவுகள்)
பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி
கடாபி அரங்கம், லாகூர்
நடுவர்கள்: அகமது சா பக்தீன் (ஆப்), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: அரிசு ரவூஃப் (பாக்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • அரிசு ரவூஃப் (பாக்) தனது 50-ஆவது பன்னாட்டு ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[36]

9 செப்டம்பர் 2023
15:00 (இநே) (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
257/9 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
236 (48.1 நிறைவுகள்)
சதீர சமரவிக்ரம 93 (72)
அசன் மகுமுத் 3/57 (9 நிறைவுகள்)
தவ்கீது இரிதோய் 82 (97)
தசுன் சானக்க 3/28 (9 நிறைவுகள்)
இலங்கை 21 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: சதீர சமரவிக்ரம (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதல் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

10–11 செப்டம்பர் 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
356/2 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
128 (32 நிறைவுகள்)
விராட் கோலி 122* (94)
சதாப் கான் 1/71 (10 நிறைவுகள்)
இந்தியா 228 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • விராட் கோலி (இந்) தனது 13,000-ஆவது பன்னாட்டு ஒருநாள் ஓட்டத்தை எடுத்தார்.[37]
  • விராட் கோலி ஆட்டப் பகுதிகளைப் பொறுத்தவரை (267) மிகவிரைவான 13000 ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார்.[38]
  • பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் ஓட்டங்கள் வாரியாக இந்தியாவின் பாக்கித்தானுக்கு எதிரான மிகப்பெரிய வெற்றி ஆகும்.[39]

12 செப்டம்பர் 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
213 (49.1 நிறைவுகள்)
 இலங்கை
172 (41.3 நிறைவுகள்)
இந்தியா 41 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: மசூதுர் ரக்மான் (வங்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: துனித் வெல்லாளகே (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தத்து.
  • ரோகித் சர்மா (இந்) தனது 10,000-ஆவது பன்னாட்டு ஒருநாள் ஓட்டத்தை எடுத்தார்.[40]
  • துனித் வெல்லாளகே (இல) தனது முதலாவது ஒருநாள் ஐவீழ்த்தலைப் பெற்றார்.[41]
  • இவ்வாட்ட முடிவை அடுத்து, இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது, வங்காளதேசம் வெளியேற்றப்பட்டது.

14 செப்டம்பர் 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
252/7 (42 நிறைவுகள்)
 இலங்கை
252/8 (42 நிறைவுகள்)
இலங்கை 2 இலக்குகளால் வெற்றி (ட/லூ)
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: அகமது சா பக்தீன் (ஆப்), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: குசல் மெண்டிசு (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆட்டம் ஒவ்வோர் அணிக்கும் 42 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.
  • இலங்கையின் வெற்றி இலக்கு 252 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • சமான் கான் (பாக்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து, இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது, பாக்கித்தான் வெளியேற்றப்பட்டது.

15 செப்டம்பர் 2023
15:00 (இநே) (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
265/8 (50 நிறைவுகள்)
 இந்தியா
259 (49.5 நிறைவுகள்)
வங்காளதேசம் 6 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ஆசிஃப் யாகூப் (பாக்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: சகீப் அல் அசன் (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • தன்சீம் அசன் சக்கீபு (வங்), திலக் வர்மா (இந்) இருவரும் தமது முதல் பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
  • ரவீந்திர ஜடேஜா (இந்) தனது 200-ஆவது பன்னாட்டு ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[42]
Remove ads

இறுதிப் போட்டி

17 செப்டம்பர் 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
50 (15.2 நிறைவுகள்)
 இந்தியா
51/0 (6.1 நிறைவுகள்)
இந்தியா 10 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), அகமது சா பக்தீன் (ஆப்)
ஆட்ட நாயகன்: முகமது சிராஜ்
  • இலங்கை நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
  • ரோகித் சர்மா (இந்) தனது 250-ஆவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[43]
  • முகமது சிராஜ் (இந்) பந்துவீச்சில் (1,002) 50 பன்னாட்டு ஒருநாள் இலக்குகளை மிக வேகமாக எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் ஆனார்.[44] சிராஜ் தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் ஐவீழ்த்தலை எடுத்தார்.[45][46] அத்துடன் சிராஜ் ஒரு ஓவரில் நான்கு இலக்குகளை வீழ்த்தி, ஒருநாள் போட்டிகளில் அவ்வாறு செய்த முதல் இந்திய பந்துவீச்சாளரும் ஆவார்.[44]
  • இலங்கையின் 50 ஓட்டங்கள் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் அவர்களின் இரண்டாவது குறைந்த ஓட்டங்கள் ஆகும், மேலும் ஆசியக் கோப்பைப் போட்டிகளில் எந்த அணியும் பெறாத மிகக்குறைந்த ஓட்டங்கள் ஆகும்.[47] இது அவர்கள் எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில் (92), மற்றும் ஒட்டுமொத்தமாக பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது முடிக்கப்பட்ட மிகக் குறுகிய இன்னிங்சு ஆகும்.[48]
  • மீதமுள்ள பந்துகளில் (263) ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச வெற்றி இதுவாகும்.[49]
Remove ads

புள்ளிவிபரங்கள்

அதிக ஓட்டங்கள்

போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த முதல் ஐந்து பேர் இந்த அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[50]

மேலதிகத் தகவல்கள் வீரர், ஓட்டங்கள் ...

அதிக இலக்குகள்

போட்டியில் ஏழு இலக்குகளை வீழ்த்தியவர்கள் இந்த அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[51]

மேலதிகத் தகவல்கள் வீரர், இலக்குகள் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads