ஆசியக் கிண்ணம் 2025
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2025 ஆசியக் கிண்ணம் (2025 Asia Cup) என்பது துடுப்பாட்ட ஆசியக் கிண்ணத்தின் 17-ஆவது பதிப்பாகும். இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2025 செப்டெம்பர் 9 முதல் 28 வரை நடைபெற்றன.[1] இந்தத் தொடரின் போட்டிகள் இருபது 20 போட்டிகளாக விளையாடப்பட்டன. 2023 நடப்பு வாகையாளராக இந்தியா விளங்கிய்து.[2]
எட்டு அணிகள் இப்போட்டிகளில் விளையாடின. ஆசியத் துடுப்பாட்ட அவையின் முழு உறுப்பினர்களான ஆப்கானித்தான், வங்காளதேசம், இந்தியா, பாக்கித்தான், இலங்கை ஆகிய ஐந்து அணிகள் நேரடியாக விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலதிகமாக 2024 ஆசிய பிரிமியர் கிண்ணப் போட்டிகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், ஆங்காங் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், இந்தியா பாக்கித்தானை 5 இலக்குகளால் வென்று ஒன்பதாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.[3][4]
Remove ads
போட்டி வடிவம்
எட்டு அணிகளும் நான்கு அணிகள் கொண்ட இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் அடுத்த சுற்றிற்குத் தகுதி பெற்றன. இந்த நான்கு அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் முதலிரு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடின.
அணிகள்
Remove ads
நிகழிடங்கள்
அணிகள்
Remove ads
குழுநிலைப் போட்டிகள்
ஆசியத் துடுப்பாட்ட அவை 26 சூலை 2025 அன்று போட்டி அட்டவணையை வெளியிட்டது.[14][15] போட்டிகள் நடைபெறும் இடங்கள் 2 ஆகத்து 2025இல் வெளியிடப்பட்டது.[16]
குழு ஏ
எ |
||
அலிசான் சராஃபு 22 (17) குல்தீப் யாதவ் 4/7 (2.1 நிறைவுகள்) |
அபிசேக் சர்மா 30 (16) யுனைது சித்தீக் 1/16 (1 நிறைவு) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
முகம்மது ஆரிசு 66 (43) ஆமிர் கலீம் 3/31 (4 நிறைவுகள்) |
அம்மாது மிர்சா 27 (23) பகீம் அஷ்ரப் 2/6 (2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- முதற்தடவையாக ஓமானும் பாக்கித்தானும் இ20ப போட்டியில் விளையாடின.
- சா பைசல், சிக்கிரியா இசுலாம் (ஓமான்) இருவரும் முதற்தடவையாக இ20ப போட்டியில் விளையாடினர்.
எ |
||
சாகிப்சாதா பர்கான் 40 (44) குல்தீப் யாதவ் 3/18 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
முகம்மது வசீம் 69 (54) சிட்டன் ராமநாதி 2/24 (4 நிறைவுகள்) |
ஆரியன் பிசுத் 24 (32) யுனைது சித்தீக் 4/23 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆரியன் பிசுத் (ஓமான்) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
- இது ஓமானின் 100-ஆவது இ20ப போட்டியாகும்.[18]
- முகம்மது வசீம் (அமீ) தனது 3000-ஆவது இ20ப ஓட்டத்தை எடுத்தார்.
- இவ்வாட்ட முடிவை அடுத்து இந்தியா சூப்பர் நான்கில் விளையாடத் தகுதி பெற்றது, ஓமான் வெளியேறியது.
எ |
||
பக்கார் சமான் 50 (36) யுனைது சித்தீக் 4/18 (4 நிறைவுகள்) |
இராகுல் சோப்ரா 35 (35) அப்ரார் அகமது 2/13 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரகம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- போட்டி நடுவர் ஆண்டி பய்க்ரொப்ட் சம்பந்தப்பட்ட இந்தியா-பாக்கித்தான் கைகுலுக்கல் சர்ச்சைக்கு பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் எதிர்ப்புத் தெரிவித்ததால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமானது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து பாக்கித்தான் சூப்பர் நான்கில் விளையாடத் தகுதி பெற்றது. அமீரகம் வெளியேறியது.
எ |
||
சஞ்சு சாம்சன் 56 (45) சா பைசல் 2/23 (4 நிறைவுகள்) |
ஆமிர் கலீம் 64 (46) குல்தீப் யாதவ் 1/23 (3 overs) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இ20ப போட்டிகளில் முதல் தடவையாக இந்தியாவும் ஓமானும் தமக்கிடையே விளையாடின.
- இ20ப போட்டிகளில் அர்ச்தீப் சிங் 100 இலக்குகளைக் கைப்பற்றிய முதலாவது இந்திய வீரரானார்.[19]
குழு பி
மூலம்: ஈஎசுபிஎன் கிரிக்கின்ஃபோ[20]
எ |
||
செதிக்குல்லா அத்தல் 73* (52) கின்சித் சா 2/24 (3 நிறைவுகள்) |
பாபர் அயாட் 39 (43) குல்புதீன் நயிப் 2/8 (3 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அசுமத்துல்லா ஒமர்சாய் (ஆப்) ஆப்கானித்தானுக்காக விரைவான அரைச்சத ஓட்டங்களைப் பெற்றார் (20 பந்துகளில்).[21]
எ |
||
நிசாக்கத் கான் 42 (40) தன்சீம் அசன் சக்கீபு 2/21 (4 நிறைவுகள்) |
லிதன் தாஸ் 59 (39) அத்தீக் இக்பால் 2/14 (3.4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ரிசாட் ஒசைன் (வங்), ஆயுசு சுக்லா (ஆங்) இருவரும் இ20ப போட்டிகளில் தமது 50-ஆவது இலக்கைக் கைப்பற்றினர்.[22]
எ |
||
பத்தும் நிசங்க 50 (34) மகெதி அசன் 2/29 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பத்தும் நிசங்க (இல) இ20ப போட்டிகளில் தனது 2,000 ஓட்டங்களைக் கடந்தார்.
எ |
||
பத்தும் நிசங்க 68 (44) யசீம் முர்தாசா 2/37 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- முதற்றடவையாக இலங்கையும் ஆங்காங்கும் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியொன்றில் விளையாடின.
எ |
||
தன்சித் அசன் 52 (31) நூர் அகமது 2/23 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இது வங்காளதேசம் விளையாடிய 200ஆவது இ20ப போட்டி ஆகும்.[23]
எ |
||
முகம்மது நபி 60 (22) நுவான் துசார 4/18 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டியின் முடிவையடுத்து இலங்கையும் வங்காளதேசமும் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றன. ஆப்கானித்தான் வெளியேற்றப்பட்டது.
Remove ads
சூப்பர் நான்கு
மூலம்: இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ[24]
எ |
||
சயீஃப் அசன் 61 (45) தசுன் சானக்க 2/21 (2.5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- தவ்கீது இரிதோய் (வங்) தனது 50-ஆவது இ20ப இலக்கைக் கைப்பற்றினார், தனது 1,000-ஆவது இ20ப ஓட்டத்தை எடுத்தார்.
- குசல் மெண்டிசு இ20ப போட்டிகளில் இலங்கைக்காக அதிக இலக்குகளைக் கைப்பற்றி, குமார் சங்கக்காரவின் சாதனையை முறியடித்தார்.
எ |
||
சாகிப்சாதா பர்கான் 58 (45) சிவம் துபே 2/33 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து, இலங்கை இறுதிச்சுற்றிற்கு முன்னேறத் தவறியது.
எ |
||
அபிசேக் சர்மா 75 (37) ரிசாத் ஒசைன் 2/27 (3 நிறைவுகள்) |
சயீப் அசன் 69 (51) குல்தீப் யாதவ் 3/18 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- முசுத்தாபிசூர் ரகுமான் (வங்) தனது 150-ஆவது இ20ப இலக்கைக் கைப்பற்றினார்.[25]
- இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
எ |
||
முகம்மது ஆரிசு 31 (23) தஸ்கின் அகமது 3/28 (4 நிறைவுகள்) |
சமீம் ஒசைன் 30 (25) சகீன் அஃப்ரிடி 3/17 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- தஸ்கின் அகமது (வங்) தனது 100-ஆவது இ20ப இலக்கைக் கைப்பற்றினார்.[26]
- பாக்கித்தான் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
எ |
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பத்தும் நிசங்க (இல) தனது முதலாவது இ20ப சதத்தைப் பெற்றார்.[27]
- சிறப்பு நிறைவு: இலங்கை 2/2, இந்தியா 3/0
Remove ads
இறுதி
எ |
||
சாகிப்சதா பர்கான் 57 (38) குல்தீப் யாதவ் 4/30 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பகீம் அஷ்ரப் (பாக்) தனது 50-ஆவது இ20ப இலக்கைக் கைப்பற்றினார்.
Remove ads
புள்ளிவிபரங்கள்
அதிக ஓட்டங்கள்
அதிக இலக்குகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads