ஆடாத ஆட்டமெல்லாம்

2009 இந்திய திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆடாத ஆட்டமெல்லாம் (Aadatha Aattamellam) ஏ. பி. அழகர் இயக்கத்தில், 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும் டி. ராதாகிருஷ்ணன் கபிலன் தயாரிப்பில், ஏ.ஆர். ரெஹனா இசை அமைப்பில், 27 மார்ச் 2009 ஆம் தேதி வெளியானது. ரவி கணேஷ், பாரதி, ஜென்னி ஜாஸ்மின் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் மகி நடேஷ் ஆவார்.[1][2][3][4][5]

நடிகர்கள்

பாரதி, ஜென்னி ஜாஸ்மின், மன்சூர் அலி கான், தி. பி. கஜேந்திரன், ரிஷி, ஸ்ரீநாத், மனோகர், குகன் ஷண்முகம், மணிகண்டன், ஸ்ரீனிவாஸ், சித்தார்த், ஷாரி, உஷா எலிசபெத், ஷங்கர், கோபி.

கதைச்சுருக்கம்

சுதாவும் (ஜென்னி ஜாஸ்மின்) அவளது கணவன் கண்ணனும் (ரிஷி) சேர்ந்து சுதாவின் சகோதரன் அசோக்கை (ரவி கணேஷ்) அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கும் காட்சியிலிருந்து படம் துவங்குகிறது.

ஆதரவில்லாத சுதாவும் அசோக்கும் உடன் பிறந்தவர்கள். அவர்களின் பெற்றோர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ள, அசோக்கை தாய் போல் வளர்த்து வருகிறாள் சுதா. துவக்கத்தில் எரிபொருள் நிரப்புமிடத்தில் வேலை செய்யும் சுதா, படிப்படியாக வளர்ந்து ஒரு வங்கியில் வரவேற்பாளராக பணிபுரிகிறாள். கல்லூரியில் பயிலும் அசோக், கூடைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்குகிறான். சக மாணவி திவ்யாவை அசோக் விரும்புகிறான்.

திருமணத்திற்கு பிறகும் தன் தம்பி தன்னுடன் தான் இருப்பான் என்ற நிபந்தனையுடன் கண்ணனை மணக்கிறாள் சுதா. ஆனால், திருமணம் முடிந்தவுடன் நிலைமை தலைகீழாக மாற, அசோக் கல்லூரி விடுதியில் தங்க நேரிடுகிறது. அங்கே அவன் போதை பழக்கத்திற்கு அடைமையாகி, படிப்பிலும் விளையாட்டிலும் நாட்டமில்லாமல் போக, கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுகிறான். அவனது போதை பழக்கத்தால், தன் நண்பர்கள், காதலி, சகோதரி ஆகியோரால் நிராகரிக்கப்படுகிறான். அவ்வாறாக ஒரு நாள், தவறதுலாக ஒரு மாடியிலிருந்து கீழே விழுகிறான் அசோக். பின்னர் அசோக்கிற்கு என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.

Remove ads

ஒலிப்பதிவு

இப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் ஏ.ஆர். ரெஹனா ஆவார். கைலாசம் பாலசந்தர், துரை, கானா உலகநாதன், சிந்தாமணி முருகேசன், பாரதி, ஜென்னி ஜாஸ்மின் ஆகியோர் முன்னிலையில், ஐந்து பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 2009 ஆம் ஆண்டு வெளியானது.[4][5][6]

வரவேற்பு

போதை பழக்கத்தின் விளைவுகளை விளக்கும் இந்தப் படத்தின் கவனக்குறைவாக இயக்கமும், ஒளிப்பதிவும், சுமாரான நடிப்பும் வருத்தமளிப்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.[7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads