ஆட்டக் கடிகாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆட்டக் கடிகாரம் என்பது இருவர், ஒரே நேரத்தில் விளையாடும் ஆட்டங்களில் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம். இதில் இரண்டு கடிகாரங்களும், அவற்றின் மேல் இரண்டு பொத்தான்களும் இருக்கும். ஒரு கடிகாரத்தின் பொத்தானை அழுத்தினால் அக்கடிகாரம் நிற்கும், அடுத்த கடிகாரம் ஓடும். ஆகவே இரண்டு கடிகாரங்களும் ஒரே நேரத்தில் ஓடாது. ஆட்டாக்காரர்கள் ஒரு நகர்த்தலுக்கு எடுக்கும் நேரத்தைக் கணிக்க இது உதவுவதுடன், ஒரு ஆட்டக்காரர் தன் நகர்த்தல் ஒன்றுக்கு அதிக நேரம் எடுத்து ஆட்டத்தை தாமதப்படுத்தாமல் இருக்கவும் உதவுகிறது.
ஆட்டக் கடிகாரங்கள் முதலில், பெரும்பாலும் சதுரங்க போட்டிகளிலேயே பயன்படுத்தப்பட்டதால், இது அடிக்கடி சதுரங்கக் கடிகாரம் எனவும் அழைக்கப்படுகிறது. பின்னர் இதன் பயன்பாடு சொல்லாக்க ஆட்டம், சோகி, வெய்ச்சி மற்றும் பொதுவாக இருவர் ஆடும் ஆட்டங்களுக்கும், வேறு சில பலகை விளையாட்டுக்களும் பரவியது. முதலில் நடுவர் அனைத்து கடிகாரங்களையும் ஒரு பக்கமாக, இலகுவாக அனைத்தையும் அவதானிக்கும் வகையில் அடுக்குவார். இது இறுதி நேரங்களில் கவனம் தேவைப்படும் ஆட்டங்களை வகைப்படுத்த உதவும். 1883 ஆம் ஆண்டு இலண்டனில் நடந்த சதுரங்கப் போட்டித் தொடரில் முதன் முதலாக ஆட்டக்கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன..[1]
Remove ads
அலைமருவி ஆட்டக் கடிகாரங்கள்

ஒரு ஆட்டக்காரரின் நேரம் முடிவடைந்ததைத் தெரியப்படுத்த, முடிவடைந்த துல்லியமான நேரத்தில் விழும் "கொடி" ஒன்று அலைமருவி ஆட்டக் கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. அனலொக் கடிகாரங்கள் இயந்திரப் பொத்தான்களை பயன்படுத்துகின்றன. ஒருவருடைய பொத்தானை அழுத்தும் போது அவருடைய கடிகார இயக்கம் நிறுத்தப்படுவதுடன் மற்றவருடைய பொத்தான் விடுவிக்கப்படும். எண்மருவி ஆட்டக் கடிகாரங்கள் பழுதடைவதால் ஏற்படும் இழப்புக்களை விட அலைமருவி ஆட்டக் கடிகாரங்கள் பழுதடைவதால் ஏற்படும் இழப்புக்கள் குறைவாகும். அதுபோலவே எண்மருவி ஆட்டக் கடிகாரங்களைப் போலவல்லாமல் அலைமருவி ஆட்டக் கடிகாரங்களை மிகக்குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என்பது இதன் அனுகூலமாகும்.
Remove ads
எண்மருவி ஆட்டக் கடிகாரங்கள்


அலைமருவி ஆட்டக் கடிகாரங்களில் பல குறைபாடுகள் இருந்ததால், 1973 இல் மின் பொறியியல் மாணவன் மற்றும் சதுரங்க ஆட்டக்காரராகவிருந்த புரூசு சேனே, முதல் எண்மருவி ஆட்டக் கடிகாரத்தை கண்டுபிடித்தார்.[2] இதன் மூலம் மிக நுணுக்கமாக ஆட்ட நேரம் கணிக்கப்பட்டது. தற்காலங்களில் சதுரங்கப் பலகையுடன் இணைக்கப்பட்ட எண்மருவி ஆட்டக் கடிகாரங்களும் பயன்பாட்டில் உள்ளது. பலகையில் உள்ள உணரிகள் மூலம் நகர்த்தல் இடம்பெற்றதைக் கணித்து இந்தக் கடிகாரம் இயங்குகிறது.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் வாசிக்கg
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads