ஆண்ட்ராய்டு ஓரியோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்ட்ராய்டு ஓரியோ (Android Oreo) என்பது ஆண்ட்ராய்டு செல்லிடத் தொலைபேசி இயக்க முறைமையின் எட்டாவது பதிப்பின் குறியீட்டுப் பெயர் ஆகும். இஃது மார்ச் 21, 2017 அன்று முதல் மேம்பாட்டு முன்னோட்டமாக வெளியிடப்பட்டது. இரண்டாவது மேம்பாடு முன்னோட்டம் மே 17, 2017 அன்று வெளியிடப்பட்டது.
Remove ads
வரலாறு
மார்ச் 21, 2017 இல், நெக்ஸஸ் 5X, நெக்ஸஸ் 6P, நெக்ஸஸ் பிளேயர், பிக்சல் சி மற்றும் பிக்சல் நுண்ணறிபேசி சாதனங்களுக்குக் கிடைக்கும் வகையில் அண்ட்ராய்டு "ஓ" எனும் இயங்குதள முன்னோட்டத்தை முதலில் வெளியிடப்பட்டது.[2][3][4][5].மொத்தம் நாண்கு முன்னோட்டத்தைக் கூகிள் வெளியிட திட்டமிட்டுள்ளது.இரண்டாவது,மே 17, 2017 அன்று வெளியிடப்பட்டது.அது பீட்டா தரமுறையாகக் கருதப்படுகிறது[6] மேலும் சூன் மற்றும் சூலையில் மேலும் முன்னோட்டங்கள் வெளியிடப்பட உள்ளன. 2017 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அதிகாரப்பூர்வமாக அதன் இறுதி அறிவிப்பினை வெளியீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.[7][8]
ஆகத்து 21 அன்று ஓரியோ என்று கூகுள் நிறுவனம் இதற்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.[9]
Remove ads
அம்சங்கள்
பயனர் அனுபவம்
வரக்கூடிய அறிவிப்புகளை உறக்கநிலையில் வைக்க முடியும், மேலும் "சேனல்கள்" என்று அறியப்படும் தலைப்பு அடிப்படையிலான குழுக்களில் அதனைச் சேர்க்கலாம்.[10] எளிதாக ரிங்டோன் போன்றவற்றை அமைத்திடலாம்.[11] அமைப்புகள் பயன்பாட்டில் ஒரு புதிய வடிவமைப்புத் தோற்றத்தைக் கொண்டிருக்கும். ஒரு வெள்ளை தீம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் விரிவான வகைப்படுத்தலைக் கொண்டிருக்கும்.[12].
மேடை
பயன்பாட்டு மென்பொருள்களில் பல்வேறு வண்ணங்களைப் பயன்படுத்த முடியும்.[13]. மேலும் பின்புலமாக இயங்கக் கூடியவற்றின் நடவடிக்கையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கும். இதன் மூலம் அதன் மின்கல திறனை மேம்படுத்தும்.[14] ஆண்ட்ராய்டு ஓ இயங்குதளத்தில் புதிய முகவடிகளை (எமோஜி) கொண்டுள்ளது. அது யுனிகோட் 10 என்ற தரத்தில் சேர்க்கப்படும். முகவடிவிற்கான புதிய எழுத்துரு சேர்க்கப்படும். இது ஆண்ட்ராய்டு கிட்கேட்டில் அறிமுகம்செய்யப்பட்ட "குமிழ்" வடிவமைப்புக்கு எதிரிடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[15][16] இது 1 ஜி.பி ரேமினைக் கொண்ட செல்லிடத் தொலைபேசிக்காகவே ஆண்ட்ராய்டு கோ என்பதனை அறிமுகம் செய்ய உள்ளது.மேலும் சாதனத்திற்குப் பொருத்தமான பயன்பாடுகளினை முன்னிலைப்படுத்திக் காட்டும்.[17][18].
Remove ads
இவற்றையும் காண்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads