ஆண்ட்ராய்டு நுகட்

ஆண்ட்ராய்டு அமைப்பின் ஏழாவது பதிப்பு From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆண்ட்ராய்டு "நுகட்" (Android Nougat ) என்பது ஆண்ட்ராய்டு இயக்க முறைமையின் ஏழாவது பெரிய பதிப்பு ஆகும்.இது மார்ச் 9, 2016 அன்று ஆல்பா சோதனை பதிப்பாக வெளியிடப்பட்டது, பின்பு ஆகஸ்ட் 22, 2016 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது, இது நெக்ஸஸ் சாதனங்களில் மட்டும் பயன்படுத்தும் வகையில் முதலில் இருந்தது.நுகட் உடன் வெளியிடப்பட்ட முதல் புதிய திறன்பேசி எல்ஜி வி 20ஆகும்.

விரைவான உண்மைகள் விருத்தியாளர், பொது பயன்பாடு ...
Remove ads

வரலாறு

கூகிள் ஐ/ஓ மேம்பாட்டாளர் மாநாட்டிற்கு முன்னால், மார்ச் 9, 2016 அன்றே கூகிள் ஆண்ட்ராய்டு நுகட் இன் முதல் ஆல்ஃபா பதிப்பு வெளியிட்டது.[3] இதன் சோதனை பதிப்பானது முதலில் நெக்சஸ் அலைபேசிகளில் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்தது.பின்பு அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.[4] ஏப்ரல் 13, 2016 இல், அண்ட்ராய்டு நுகட் பீட்டாவின் இரண்டாவது முன்னோட்டம் வெளியிடப்பட்டது[5]. மே 18, 2016 இல் நடைபெற்ற கூகிள் மேம்பாட்டாளர் மாநாட்டிலிது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.அதில் மெய்நிகர் தொழில்நுட்பம் பற்றியும், அதன் அடுத்த சோதனை பதிப்பையும் வெளியிட்டனர்..[6][7][8]15, 2016 அன்று அதனுடைய நான்காவது சோதனை பதிப்பினை வெளியிட்டது.[9][10].சூன்30,2016 -ல் அதிகாரப்பூர்வ பதிப்பினை வெளியிட்டது.அது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் 7 வது பதிப்பாக வெளியிடப்பட்டது.[11][12][13]

Remove ads

வசதிகள்

பயனர் அனுபவம்

இந்த பதிப்பில் அறிவிப்புகளின் முறைகளில் மாற்றம்கொண்டுவந்துள்ளது. அதனை பட்டியலிடவும் அழைப்பினை உள் சென்று பார்க்காமலே அதற்கு பதில் தரவும் முடியும்.அமைப்புகளில் உள்ள ஐகான்களின் அளவினை மாற்றவும் முடியும்.ஆண்ராய்டு வியரில் பயன்படுத்த முடியும். பல சாளர(multi-window mode) இதில் உள்ளது.இதன் மூலம் ஒரே சமயத்தில் இரண்டு பயன்பாடுகளை செய்ய முடியும்.உதாரணமாக படம் பார்த்துக் கொண்டே உலாவியில் தேட முடியும்[14].புதிய டேட்டா சேவர் பயன்பாடு பின்புல நிகழ்வுகளை கட்டுப்படுத்தி அதிகமான இணையத்தை சேமிக்கச் செய்கிறது

மேடை

இரண்டாவது முன்னேற்ற பதிப்பில் வுல்கான் (Vulkan) என்பதின் உதவியுடன் சிறப்பான வரைகலை திறனுடன் (graphics performance) செயல்படுகிறது[5][15][16].யுனிகோட் ஒன்பதாவது பதிப்புடன் வந்த முதல் இயங்குதளம் ஆகும்.[5] மேலும் இதனுடன் முகவடிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

Remove ads

இவற்றையும் காண்க

ஆண்ட்ராய்டு பதிப்புகளின் வரலாறு 'முந்தைய பதிப்புகள்'

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads