ஆதியலா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆதியலா ( Adiala ) என்பது பாக்கிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள இராவல்பிண்டி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 379 மீட்டர் (1246 அடி) உயரத்தில் உள்ள இக்கிராமம் 33 ° 27'30வ 72 ° 59'48கி ஆள்கூறுகளைக் கொண்டுள்ளது. [1]. இராவல்பிண்டி மத்திய சிறை என்றழைக்கப்படும் ஆதியலா சிறை இக்கிராமத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

விரைவான உண்மைகள் ஆதியலா, நாடு ...
Remove ads

வரலாறு

சுமார் 5,00,000 முதல் 1,25,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோவனிக கலாச்சார சகாப்தத்தின் கலைப்படைப்புகள் கண்டறியப்பட்ட இடங்களுள் ஒன்று ஆதியலா கிராமம் ஆகும். இக்கிராமத்திலும், மற்றும் இராவல்பிண்டியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காசலா கிராமத்தில் பாயும் சோவன் நதி வளைவுகளிலும் நூற்றுக்கணக்கான கூழாங்கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சாண்ட்ரா என்றவிடத்தில் கற்களால் ஆக்கப்பட்ட கைக்கோடாரிகளும் வெட்டுக்கத்திகளும் கிடைக்கப்பெற்றன [2].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads